Thursday, July 9, 2009

மத்திய பட்ஜெட் - 2009

2008-09ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த பட்ஜெட் மதிப்பீடுகள் ரூ. 7,50,884 கோடியிலிருந்து ரூ. 9,09,053 கோடிய உயர்வு-பட்ஜெட் மதிப்பீட்டை விட வரிகள் மூலமான வருவாய் ரூ. 60,000 கோடி குறைவு-

மானியங்களுக்கு ரூ. 95,500 கோடி ஒதுக்கீடு-

தேர்தலுக்குப் பின் கூடுதல் திட்ட செலவு 0.5-1.0 % அதிகரிக்கும்-

கிராப்புற சுகாதார திட்டத்துக்கு ரூ. 1,200 கூடுதல் நிதி-ரூ. 40,000 கோடிக்கு வரிச் சலுகைகள்-

உணவு, உரம், பெட்ரோலியம் மீதான மானியம் அதிகரிப்பு-

குழந்தைகள் மதிய உணவு திட்டத்துக்கு ரூ. 8,300 கோடி

குடிநீர் திட்டங்களுக்கு ரூ. 7,400 கோடி

- 2009-10ல் பாதுகாப்புத்துறைக்கு ரூ. 1,41,703 கோடி ஒதுக்கீடு- 2009-10ல் வரி வருவாய் ரூ. 6,71,293 கோடியாக இருக்கும்-

விளையாட்டுத்துறைக்கு கூடுதல் நிதி- 2008ல் 15 புதிய பலக்லைக்கழகங்கள் உருவாக்கம்-

நிதி பற்றாக்குறை 6 சதவீதமாக இருக்கும்-

ஏற்றுமதியாளர்களுக்கு 2 சதவீத வரி சலுகை- 2009-10ல் பாரத் நிர்மாண் திட்டத்துக்கு ரூ. 40,900 கோடி

- 2008-09ல் வரி வருவாய் அதிகரிக்கும்- வருவாய் பற்றாக்குறை 4.4% ஆக இருக்கும்-

குழந்தைகள் நல திட்டங்களுக்கு ரூ. 6,705 கோடி-

ஜவஹர்லால் நேரு நகர்ப்புற மறுமலர்ச்சி திட்டத்துக்கு ரூ. 11,842 கோடி

மத்திய திட்ட ஒதுக்கீடு ரூ. 2,43,386 கோடியிலிருந்து ரூ. 2,82,957 கோடியாக உயர்வு-

பொதுத்துறை வங்கிகளின் லாபமில்லா சொத்துக்கள் 2.3% குறைந்தது வட்டிகள் குறைய வேண்டும்-

மீண்டும் கூடியது அவை- கேரள எம்பி வீரந்திர குமாருக்கு வலிப்பு-மயக்கம்-

மக்களவை 10 நிமிடம் ஒத்திவைப்பு-

2008ல் சிறுபான்மையினர் நலனுக்கு 15 சிறப்பு திட்டங்கள்- 2009ல் வரியல்லாத வருவாய் ரூ. 96,208 கோடியாக இருக்கும்-

திட்டச் செலவுகள் ரூ. 3 கோடியாக இருக்கும்-

வரிகள் குறைக்கப்பட வேண்டும்- ஐடிஐகளில் சேர இளம் விதவைகளுக்கு முன்னுரிமை-

கிராப்புற வங்கிகளுக்கு ரூ. 652 கோடி ஒதுக்கீடு-

2008ல் மாணவர்களுக்கான கடன் ரூ. 24,260 ஆக உயர்வு-

2003-2008 இடையே பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய் ரூ. 10,81,000 கோடியாக உயர்வு. இது 81% வளர்ச்சி.-

கிராப்புற வங்கிகளுக்கு ரூ. 621 கோடி ஒதுக்கீடு

- 2009-10ல் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் 2 புதிய ஐஐடிக்கள்-

2008ல் 6 புதிய ஐஐடிகள் துவக்கப்பட்டன- கோதுமைக்கான குறைந்தபட்ச விலை ரூ. 600ல் இருந்து ரூ. 1080ஆக அதிகரிப்பு-

ஊரக வேலைவாய்ப்பு திட்டங்கள் மேலும் விரிவாக்கப்படும்-

விவசாயக் கடன் 3 மடங்கு, அதாவது, ரூ. 2,50,000 கோடியாக அதிகரிப்பு-

பொருளாதார தேக்கத்தை சமாளிக்க வரி சீரமைப்புகள்- ரூ. 65,300 கோடி விவசாய கடன் தள்ளுபடி

- 2008ல் இந்திரா அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 60.12 லட்சம் வீடுகள்-

2008ல் தொழில்துறையும், விவசாயத்துறையும் தான் ஹீரோக்கள்-

ஊரக வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம்

- 2007-08ல் 32.5 பில்லியன் டாலர் அன்னிய முதலீடு வருகை-

35 அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு அனுமதி-

பண வீக்கம் பெருமளவு குறைவு, சவாலை சாளித்தோம்

- வெளிநாட்டு வர்த்தகம் 35.4 % உயர்வு-

விவசாயத்துறைக்கு 20004-05 ஆண்டோடு ஒப்பிடுகையில் 2008-09ல் 300% அதிக ஒதுக்கீடு-

அடிப்படை கட்டமைப்பு துறைக்கு கடன் தரும் வங்கிகளுக்கு ஐஐஎப்சிஎல் மூலம் நிதி தரப்படும்-

நிதி, வருவாய் பற்றாக்குறை குறைவு

- ஏற்றுமதி 17.1% சரிவு- அடிப்படை கட்டமைப்பு துறையில் ரூ.70,000 கோடி முதலீடுகள் அனுமதி-

பொருளாதார தேக்கத்தால் நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பதில் பெரும் சிக்கல்-

2008ல் விவசாயத்துறையி்ல் பெரும் வளர்ச்சி
ரேசன் மூலம் 22.7 மி்ல்லியன் டன் கோதுமை வினியோகம்
- 28.5 மில்லியன் டன் அரிசு வினியோகம்
- உற்பத்தித்துறையிலும் பெரும் வளர்ச்சி- கடந்தாண்டு முதலீடுகள் 39 % அதிகரிப்பு
- 7-8% பொருளாதார வளர்ச்சி பராமரிக்கப்படும்
- பற்றாக்குறை 2.7% குறைந்துள்ளது
-வரி வருவாய் 12.5 % அதிகரிப்பு

Friday, December 26, 2008

இ‌ந்து பய‌ங்கரவா‌திகளை வரவே‌ற்‌கிறே‌‌ன்' : பா‌ல் தா‌க்கரே!
செவ்வாய், 23 டிசம்பர் 2008( 19:00 IST )


இ‌ந்து பய‌ங்கரவா‌திக‌ள் உருவாவதை‌த் தா‌ன் வரவே‌ற்பதாக ‌சிவசேனா க‌ட்‌சி‌த் தலைவ‌ர் பா‌ல் தா‌க்கரே கூ‌றியு‌ள்ளா‌ர்.இதுகு‌றி‌த்து அவ‌ர் ‌சிவசேனா க‌ட்‌சி‌ப் ப‌த்‌தி‌ரிகையான 'சமானா'‌வி‌ற்கு அ‌ளி‌த்து‌ள்ள பே‌ட்டி‌யி‌ல், 'செ‌ப்ட‌ம்ப‌ர் 29இ‌ல் மாலேகா‌னி‌ல் நட‌ந்த கு‌ண்டு வெடி‌ப்புகளு‌க்கு‌ப் ‌பி‌ன்னா‌ல் இ‌ந்து பய‌ங்கரவா‌திக‌ள் இரு‌ந்தா‌‌ல், நா‌ன் ம‌கி‌ழ்‌ச்‌சியடை‌கிறே‌ன். இ‌ந்து‌க்க‌ளி‌‌ல் பய‌ங்கரவா‌திக‌ள் ‌நி‌ச்சயமாக‌ப் ‌பிற‌க்க வே‌ண்டு‌ம்' எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.


மாலேகா‌ன் கு‌ண்டு வெடி‌ப்புக‌ள் வழ‌க்கு தொட‌ர்பாக கைது செ‌ய்ய‌ப்ப‌ட்‌டு‌ள்ள சா‌த்‌வி ‌பிர‌க்யா ‌சி‌ங், லெ‌ப்டின‌ன்‌ட் க‌ர்னல் புரோஹ‌ி‌த் செ‌ய்த தவறு எ‌ன்ன? உண‌ர்வுகளா‌ல் தூ‌ண்ட‌ப்ப‌ட்ட இ‌ஸ்லா‌மிய‌ர்களு‌க்கு எ‌திராக ஏதாவது ‌நி‌ச்சய‌ம் செ‌ய்தாக வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ர் அவ‌ர்.


எ‌ல்லை தா‌ண்டிய பய‌ங்கரவாத‌ம் கு‌றி‌த்து‌ப் பே‌சிய தா‌க்கரே, "இராணுவ‌த்‌தி‌ன் உய‌ர் அ‌திகா‌ரிக‌ள் சு‌த்தமானவ‌ர்க‌ள். அவ‌‌ர்க‌ள் ஒழு‌க்க‌த்‌தி‌ன் ‌சி‌ன்ன‌ம். ஆனா‌ல் எ‌ல்லை‌ப் பகு‌திக‌ளி‌ர் ஊழ‌ல் ‌நிறை‌‌ந்து‌ள்ளது. வ‌ங்காள தேச மு‌ஸ்‌லி‌ம்க‌ள் எ‌ப்படி எ‌ல்லையை‌த் தா‌ண்டி இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ள் வர முடியு‌ம்? எ‌ல்லை‌யி‌ல் எ‌ன்னதா‌ன் நட‌க்‌கிறது?" எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர்.

Saturday, November 8, 2008

மாலேகாவ் குண்டுவெடிப்பில் தொடர்பு : ராணுவ அதிகாரி ஒப்புதல்

மும்பை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2008 ( 13:35 IST )

மாலேகாவ் குண்டுவெடிப்பில் தமக்கு தொடர்புள்ளதை கைது செய்யப்பட்ட ராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் புரோகித் ஒப்புக் கொண்டுள்ளதாக மகாராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதியன்று மாலேகாவில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புக்கான சதித் திட்ட வரைவை தாம்தான் தயாரித்துக் கொடுத்ததோடு,அதற்கு தேவையான வெடி மருந்துகள் உள்ளிட்டவைகளையும் அளித்ததாகவும் விசாரணையில் புரோகித் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலேகாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண் சாமியார் பிரகியா தாகூர், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளான ரமேஷ் உபாத்தியா மற்றும் ஷரத் குல்கர்னி ஆகியோர் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து ராணுவ அதிகாரிகள் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களுக்கு ராணுவத்தில் தற்போது பணிபுரியும் ஸ்ரீகாந்த் புரோகித்துடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து புரோகித்தை கடந்த 5 ஆம் தேதியன்று மகாராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில்,விசாரணையில் குண்டுவெடிப்பில் தமக்குள்ள தொடர்பை புரோகித் ஒப்புக் கொண்டுள்ளார்.

மலேகா‌ன்: முழு‌ப் ப‌ரிணாம‌த்தையு‌ம் க‌ண்டு‌பிடி‌ப்போ‌ம்- ம‌த்‌திய அரசு!

மலேகா‌ன் கு‌ண்டு வெடி‌ப்புக‌ள் வழ‌க்‌கி‌ல் ப‌ணி‌யி‌ல் உ‌ள்ள ராணுவ அ‌திகா‌ரி‌க்கு‌த் தொட‌ர்பு‌ள்ளது கு‌றி‌த்து‌க் கவலை தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ம‌த்‌திய அரசு, இ‌ந்த‌‌ச் ச‌ம்பவ‌த்‌தி‌ன் முழு ப‌ரிமாண‌த்தையு‌ம் க‌ண்ட‌றிய நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று கூ‌றியு‌ள்ளது.

இ‌வ்வழ‌க்‌கி‌ல், லெ‌ப்டின‌ன்‌ட் கலோனலு‌க்கு எ‌திராக‌ மரா‌ட்டிய‌க் காவ‌ல் துறை‌யின‌ரி‌ன் ‌விசாரணை அ‌றி‌க்கை‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் பாதுகா‌ப்பு அமை‌ச்சக‌த்‌தி‌ன் மூல‌ம் கடு‌ம் நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் அரசு கூ‌றியு‌ள்ளது.

இதுகு‌றி‌த்து‌ப் பாதுகா‌ப்பு அமை‌ச்ச‌ர் ஏ.கே. அ‌ந்தோ‌ணி தலைநக‌ர் டெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூ‌றியதாவது:

இ‌ந்த‌ச் ச‌ம்பவ‌ம் (கு‌ண்டு வெடி‌ப்புக‌ளி‌ல் ராணுவ அ‌திகா‌ரி‌க்கு‌த் தொட‌ர்‌பிரு‌ப்பது) ந‌ம் அனைவரு‌க்கு‌ம் ஆ‌ழ்‌ந்த கவலையை‌த் தர‌க்கூடியதாகு‌ம். கு‌ண்டு வெடி‌ப்புக‌ளி‌ன் முழு‌ப் ப‌ரிமாண‌த்தையு‌ம் க‌ண்ட‌றிவத‌ற்கு நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம்.மரா‌ட்டிய‌க் காவ‌ல்துறை‌யின‌ரி‌ன் ‌விசாரணை அ‌றி‌க்கை‌‌க்காக நா‌ங்க‌ள் கா‌‌த்‌திரு‌க்‌‌கிறோ‌ம். அ‌ந்த அ‌றி‌க்கை‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் ‌லெ‌ப்டின‌ன்‌ட் கலோன‌ல் ‌மீது பாதுகா‌ப்பு அமை‌ச்சக‌த்‌தி‌ன் மூல‌ம் நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம். ‌

இதுபோல, ச‌ந்தேக‌த்‌தி‌ற்கு‌ரிய அ‌திகா‌ரிக‌ளி‌ன் ‌மீது விசாரணை‌ நட‌த்த, எ‌ந்த‌வித‌த் தய‌க்கமு‌ம் இ‌ன்‌றி முழு ஒ‌த்துழை‌ப்பை‌த் தர ராணுவமு‌ம் பாதுகா‌ப்பு அமை‌ச்சகமு‌ம் தயாராக உ‌ள்ளன.இ‌வ்வாறு அவ‌ர் கூ‌றினா‌ர்.

Wednesday, November 5, 2008

அமெரிக்க அரசியலும் ஒபமாவும்

வாஷிங்டன்: அமெரிக்காவின் 44வது அதிபராக தேர்வாகியுள்ள பராக் ஒபாமா (47) நிற, இன, மத அடையாளங்களை எல்லாம் வென்றுதான் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.1961ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி ஹவாய் தீவில் பிறந்தவர் ஒபாமா. ஹாவர்ட் பல்கலைக்கழகத்தி்ல் சட்டம் படித்தவர். இவரது முழுப் பெயர் பராக் ஹூசேன் ஒபாமா.இவரது தந்தை கென்ய நாட்டைச் சேர்ந்த கருப்பர் இனத்தவர். தாயார் அமெரிக்க வெள்ளையினப் பெண். இவரது நிறமும் பெயரில் இருக்கும் 'ஹூசேனும்' தேர்தலில் ஒபமாவுக்கு பெரும் சவாலைத் தந்தவை.இதனால் ஒபமாவின் இந்த வெற்றி நிற, இன, மத அடையாளங்களை எல்லாம் தாண்டிய மாபெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.

இளம் வயதிலேயே ஜனநாயகக் கட்சியின் பால் ஆர்வம் கொண்ட ஒபாமா மிகச் சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர், பேச்சாளர்.ஹில்லாரி கிளின்டனைத் தாண்டி இவர் வேட்பாளராக முடியுமா என்று எல்லோரும் யோசித்த நிலையில் அவரை வென்று காட்டினார். அடுத்ததாக வியாட்நாம் போரில் பங்கேற்ற ஜான் மெக்கெய்னின் நாட்டுப் பற்றுக்கும், அரசியல் அனுபவத்துக்கும் இவர் இணையாவாரா என்ற கேள்வியோடு தொடங்கிய பிரச்சாரத்தில் வென்று காட்டியிருக்கிறார் ஒபாமா.

1996ம் ஆண்டுவரை சிகாகோவின் சவுத் சைட் பகுதியில் சமூக நல நிர்வாக என்ற சிறிய அரசுப் பணியில், குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வந்தார். ஆனால், தனது செயல்கள், பேச்சால் அந்தப் பகுதியில் பிரபலமானார்.1996ம் ஆண்டு இலினாய்ஸ் மாகாண செனட் சபைக்கு தேர்வானார். அன்று ஆரம்பித்தது ஒபாமாவின் அரசியல் பயணம். 2004ம் ஆண்டு பெரும் வெற்றி பெற்று அமெரிக்க செனட்டில் நுழைந்தார்.

சிறந்த எழுத்தாளரான ஒபாமா எழுதிய 'The Audacity of Hope', 'Dreams From My Father' ஆகிய புத்தகங்கள் ஏராளமாக விற்பனையாயின.ஆனாலும் இவரை குடியரசு கட்சி வேட்பாளராக்கியபோது அது பெரிய சூதாட்டமாகவே பார்க்கப்பட்டது. இவரால் மெக்கெய்னை வெல்ல முடியுமா? என்ற கேள்விக்கு தனது பாணியில் பதில் தந்திருக்கிறார்.

45 ஆண்டுகளுக்கு முன் சம உரிமை கோரி போராடிய அமெரிக்காவின் மாபெரும் கருப்பர் இனப் போராளி்யான மார்ட்டின் லூதர் கி்ங்கின் கனவை மெய்யாக்கியுள்ளார் ஒபாமா.சமீபகாலத்தில் இது போன்ற ஒரு வெற்றியை எந்த வேட்பாளரும் பெற்றதில்லை என்ற அளவுக்கு வெற்றியை பெற்றிருக்கும் ஒபாமா பிரச்சாரத்தில் பயன்படுத்திய வார்த்தை, ''Change''!. அதை செய்தும் காட்டியிருக்கிறார்.

தான் ஒரு கிருஸ்தவன் என்று ஒபாமா திரும்பத் திரும்ப சொன்னாலும் பராக் என்பது அரபிச் சொல்லாச்சே, ஹூசேன் வேறு இருக்கிறதே.. என்று எதிர் தரப்பு பிரச்சாரம் செய்தது. பராக் என்பதற்கு 'ஆசிர்வதிக்கப்பட்டவன்' என்று அர்த்தம். இராக்கில் அமெரிக்கப் படைகள் ஊடுருவதை எதிர்த்தவர், ஈரானுடன் நிபந்தனையில்லாமல் பேச்சு நடத்த வேண்டும் என்று சொன்ன ஒபாமாவுக்கு உலக அறிவும் மிக அதிகம்.இந்திய-பாகிஸ்தான் சிக்கலை மிக நன்றாகவே புரிந்து வைத்திருப்பவர்.

தீவிரவாதம், அணு ஆயுத பரவல், வறுமை ஒழிப்பு, கொலைகள் தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நோய் தடு்ப்பு.. இவை தான் தான் முக்கிய கவனம் செலுத்தப் போகும் 'ஏரியாக்கள்' என்கிறார்.ஒபாமாவின் மனைவி மிசேலும் ஒரு வழக்கறிஞர் தான். இவர்களுக்கு மாலியா, சசா என 10 வயது, 7 வயது மகள்கள் உள்ளனர்.

பராக் பதவிக்கு வருவது யாருக்கு மகி்ழ்ச்சியோ இல்லையோ, யாருக்கு வருத்தமோ இல்லையோ, அவுட்சோர்சி்ங் செய்யும் நிறுவனங்களும், இதன்மூலம் 'வாழ்ந்து' வரும் இந்திய பிபிஓ உள்ளிட்ட நிறுவனங்களும் பெரும் அச்சத்தில் உள்ளன.அவுட்சோர்சிங் செய்து வேலைவாய்ப்புகளை வெளிநாடுகளுக்கு அனுப்பாமல் அமெரிக்காவிலேயே வேலைவாய்ப்பை உருவாக்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை தருவேன் என்று கூறியிருக்கிறார் ஒபாமா.நம் ஊர் அரசியல்வாதிகள் மாதிரி ஓட்டு வாங்குவதற்காக மட்டும் இதைச் சொல்லியிருந்தால் பரவாயில்லை...!!!

இது அமெரிக்காவுக்கு புதிய விடியல்!-ஒபாமா

புதன்கிழமை, நவம்பர் 5, 2008

சிகாகோ: தனது சொந்த ஊரான சிகாகோவில் கிராண்ட் பார்க் மைதானத்தில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களிடையே அவர் ஆற்றிய உணர்ச்சிகரமான உரை:

நம் நாட்டை உருவாக்கியவர்களின் கனவுகள் நம் காலத்தில் நிறைவேறியிருக்கின்றன. இது நம் ஜனநாயகத்தின் பலத்தை காட்டுகிறது. இப்போது வரலாற்றின் இதயத்தில் கையை வைத்துப் பார்த்தால் அதன் மகிழ்ச்சித் துடிப்பை நீ்ங்கள் உணர முடியும்.என்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் மெக்கெய்ன் இந்த நாட்டுக்கு ஆற்றிய கடமைகளை இந்த நேரத்தில் எளிதாக புறம்தள்ளிவிட முடியாது. எனக்கு சரியான போட்டி தந்தாலும் என்னுடன் தனிப்பட்ட முறையில் அன்பையும் பகிர்ந்த அவருக்கு என் நன்றிகள்.

அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பிரச்சாரத்தை நாம் நடத்தினோம். இதற்காக கட்சியினருக்கும் எனக்குத் துணை நின்ற அமெரிக்க மக்களுக்கும் நன்றி. இந்த வெற்றி எனக்குரியதல்ல, இது அமெரிக்க மக்களின் வெற்றி.இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவுக்குத் தேவைப்பட்ட மாற்றம் வந்துவிட்டது. நமக்கு புதிய உத்வேகமும் பலமும் கிடைத்துள்ளது.

இந்த நேரத்தில் என் பெற்றோர், குடும்பம், மனைவி, குழந்தைகளுக்கு என் நன்றிகளை சொல்லிக் கொள்கிறேன். நாட்டின் பிரச்சனைகள் தொடர்பாக நான் உங்களிடம் நேர்மையாக இருப்பேன். இந்த வெற்றி அமெரிக்க மக்களின் குரல. உங்கள் குரலை தொடர்ந்து கேட்பேன், அதன்படியே செயல்படுவேன்.

இந்தப் பதவிக்கு என்னை கட்சி நிறுத்தியதே ஆச்சரியம் தான். எங்களிடம் பணம் இல்லை, பெரிய நிறுவனங்களின் ஆதரவில்லை.ஆனால், பணத்தை மக்கள் தந்தார்கள். 5 டாலர், 10 டாலர் என தங்களது சிறிய சேமிப்புகளை அன்புடன் தந்தார்கள். சிறுவர், சிறுமிகளும் நிதி கொடுத்தார்கள். தேர்தல் பிரச்சாரத்தை கட்சியினரோடு சேர்ந்து மக்களே நடத்தினார்கள். இதனால் கிடைத்த வெற்றி இது.

இது அமெரிக்காவுக்கு ஒரு புதிய விடியல். இந்த வெற்றியை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் உலகம் இந்த நூற்றாண்டின் மாபெரும் பொருளாதார சவாலை எதிர்கொண்டிருக்கிறது. குழந்தைகள் எல்லாம் தூங்கிய பிறகு தந்தையும் தாயும் விழித்து உட்கார்ந்து எப்படி நம் கடன்களை அடைக்கப் போகிறோம், எப்படி டாக்டருக்கு பில் கட்டப் போகிறோம்.. எப்படி குழந்தைகளை படிக்க வைக்கப் போகிறோம் என்று கவலைகளில் இரவைக் கழி்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் பொருளாதார நிலைமை அப்படி இருக்கிறது.

2 போர்களின் தாக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பாலைவனத்திலும் மலைகளிலும் நமது வீரர்கள் உயிரை பணயம் வைத்து நம்மைக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு இன்று விடிவு பிறந்திருக்கிறது. நாட்டின் பிரச்சனைகளுக்கும் விடிவு வரும், பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொண்டு தீர்ப்போம், நம்பிக்கையோடு இருங்கள். இந்த பொருளாதார சிக்கல் நமக்கு ஒரு பாடத்தை தெளிவாக சொல்லிவிட்டது. சாதாரண மக்கள் வளமாக இல்லாவிட்டால் வால் ஸ்ட்ரீட் வாழ முடியாது. சாதாரண தெருக்களில் நடமாடும் மக்களை தவிர்ததுவிட்டு வால் ஸ்ட்ரீட் மட்டும் செழித்துவிட முடியாது.மீண்டும் மீண்டும் அதே பழைய கொள்களைகளை பிடித்துக் கொண்டு அலையாமல், தோற்றுப் போன விஷயங்களில் இருந்து பாடம் கற்றால் தான் தீர்வு கிடைக்கும். அதைச் செய்வோம்.

அமெரிக்காவின் இனவாதம் குறித்த கேள்விகளுக்கு இந்த வெற்றி ஒரு பாடம். இந்த வெற்றி நாம் உண்மையான 'யுனைடட்' ஸ்டேட்ஸ் தான் என்பதை நிரூபித்துவிட்டது என்றார். ஒபாமாவின் பேச்சை கூட்டம் உற்சாகத்துடன் குரல் எழுப்பி கொண்டாடியது.

பின்னர் துணை அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பிடேனை அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து ஒபாமாவின் மனைவி மிசேல், ஜோ பிடேனின் மனைவி ஆகியோர் ஒபாமா, பிடேனை வாழ்த்தினர். இதையடுத்து இருவரின் குடும்பத்தினரும் மேடையேறி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். வெற்றி பெற்றுள்ள ஒபாமாவுக்கு உலக நாடுகளின் தலைவர்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிய ஆரம்பித்துள்ளன.

ஒபாமா மாபெரும் வெற்றி-கருப்பர் இன மக்கள் கண்ணீருடன் கொண்டாட்டம்

புதன்கிழமை, நவம்பர் 5, 2008

வாஷிங்டன்: அமெரிக்காவின் முதல் கருப்பர் இனத்தைச் சேர்ந்த அதிபராகிறார் பராக் ஒபாமா. ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான பராக் ஒபாமாபெரும்பாலான மாகாணங்களில் வென்றார். இதன்மூலம் செனட் சபையிலும் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது.இந்த வெற்றிகள் மூலம் மொத்தமுள்ள 538 புள்ளிகளில் (Electoral College) ஒபாமா 338 புள்ளிகளையும் மெக்கெய்ன் 163 புள்ளிகளையும் வென்றுள்ளனர்.

அதிபராக 270 புள்ளிகள் தான் தேவை என்ற நிலையில் ஒபாமா மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.நாடு முழுவதும் பதிவான வாக்குகளில் பராக் ஒபாமா 52 சதவீத வாக்குகளை வென்றார்.குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜான் மெக்கெய்ன் 47 சதவீத வாக்குகளைப் பெற்றார்.இதன் மூலம் நாட்டின் 44வது அதிபராகிறார் ஒபாமா. .

மேலும் அமெரிக்க அதிபராகும் முதல் கருப்பர் இனத் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார். அமெரிக்காவில் கருப்பர் இனத்தினருக்கு ஓட்டுரிமையே 1964ம் ஆண்டு தான் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மோசமான கொள்கைகளே குடியரசு வேட்பாளர் மெக்கெய்னின் படுதோல்விக்கு காரணமாகக் கருதப்படுகிறது. தனது சொந்த ஊரான சிகாகோவில் வாக்களித்த ஒபாமா தனது வெற்றியையும் அங்கேயே கொண்டாடினார். அவரது பேச்சைக் கேட்க காகோவின் கிராண்ட் பார்க் பகுதியில் சுமார் 10 லட்சம் மக்கள் திரண்டு பல மணி நேரம் காத்திருந்தனர். பின்னர் அவர்களிடையே ஒபாமா உரையாற்றினார்.

அதே போல அமெரிக்கா முழுவதுமே ஒபாமாவின் வெற்றியைக் கொண்டாட ஆங்காங்கே மக்கள் கூடியுள்ளனர்.பல இடங்களில் கருப்பர் இன மக்கள் கைகளில் அமெரிக்கக் கொடியை ஏந்தியபடி மகிழ்ச்சியி்ல் கண்ணீர் வடித்தபடி நின்றுள்ளனர்.

1960களுக்குப் பிறகு இந்தத் தேர்தலில் தான் மிக அதிகபட்சமான வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

மவுலானா ஆசா‌‌‌த்‌தி‌ன் ‌‌பிற‌ந்த ‌தின‌ம் : நவ.11 தே‌சிய க‌ல்‌வி ‌தினமாக கடை‌பிடி‌ப்பு!

புதன், 5 நவம்பர் 2008( 17:16 IST )



சுதந்திர போராட்ட வீரரும், மிகச் சிறந்த கல்வியாளரும், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான மௌலான அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்த தினமான நவம்பர் 11ஆ‌ம் தேதி தேசிய கல்வித் தினமாக கொண்டாடப்படவுள்ளது.



இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட மௌலான ஆசாத்தின் நினைவினைப் போற்றும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தேசிய கல்வித் தினத்தை நாடெங்கிலும் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது. இதனையொட்டி அன்று கல்வி நிறுவனங்களில் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கருத்தரங்குகள், பணிமனைகள், பேரணிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



நவம்பர் 11ஆ‌ம் தேதியன்று புது டெ‌ல்‌லி விக்யான் பவனில் நடைபெறும் துவக்க விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். விழாவுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங் தலைமை வகிக்கிறார்.



நவீன கல்வியின் சிற்பியும், நாட்டின் தலைசிறந்த குடிமகனுமான மௌலான ஆசாத் நினைவாக சிறப்பு அஞ்சல் உறை ஒன்றும் விழாவில் வெளியிடப்படவுள்ளது. இந்திய தேசிய நூல் அறக்கட்டளை அவரைப் பற்றி வெளியிட்டுள்ள நூல்களின் திரட்டும் அன்று வெளியிடப்படும். மௌலானா ஆசாத் தொடர்பாக புகைப்பட கண்காட்சி ஒன்றுக்கும் விக்யான் பவனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த விழாவில் மாநில மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், மத்திய கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், சிறந்த கல்வியாளர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.இதைப் போல பல நிகழ்வுகள் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நவம்பர் 11 அன்று நடைபெறவுள்ளன.



தேர்தல் ஆணையம் இந்த விழாவில் அரசியல் தொடர்பான உரைகள் இடம் பெறக்கூடாது என்ற நிபந்தனையுடன் இந்த நிகழ்வுகளுக்கு அனுமதி அளித்துள்ளது.



இந்த சமுதாயத்தில் இருந்து ஒரு கல்விமானின் பிறந்தநாள் நாட்டின் கல்வி தினமாக கொண்டாடப்படும் வேலையில் நம் சமுதாயத்தின் கல்விநிலையில் இந்த அரசாங்கமும் குறிப்பாக நம் சமுதாயமும் அக்கறை கொள்ளுமா?


எந்த ஒரு சமூதாயத்தவரும் தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில் அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை - அல் குர்ரான் 13:11

Thursday, October 30, 2008

கியூபா மீதான யுஎஸ் தடை: நீக்க ஐநா (17) தீர்மானம்

வியாழக்கிழமை, அக்டோபர் 30, 2008

ஐ.நா: கியூபா மீதான 46 ஆண்டு கால அமெரிக்க பொருளாதார தடையை நீக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையில் 17வது முறையாக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பரம வைரிகளில் ஒன்று கியூபா. அந்த நாட்டின் மீது கடந்த 46 ஆண்டு காலமாக பொருளாதார தடையை விதித்துள்ளது அமெரிக்கா. ஆனால் அதையும் மீறி கியூபா மிகப் பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. தொடர்ந்து தனது அமெரிக்க எதிர்ப்பில் தீவிரமாகவும் உள்ளது.இந்த நிலையில், கியூபா மீதான அமெரிக்க பொருளாதார தடையை நீக்க வேண்டும் என உலக நாடுகள் அமெரிக்காவை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதை அமெரிக்கா சட்டை செய்வதில்லை.

ஐ.நா. சபையும் தொடர்ந்து தடையை நீக்க வேண்டும் என கடந்த 16 வருடமாக அமெரிக்காவை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் 17வது வருடமாக அமெரிக்காவின் பொருளாதார தடையை நீக்க வேண்டும் என ஒருமித்த குரலில் ஐ.நா. சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஆனால் கடந்த 16 வருடங்களாக ஐ.நா.வின் தீர்மானத்தை கண்டுகொள்ளாமல் விட்டதைப் போல இந்த முறையும் புஷ் நிர்வாகம் இந்தத் தீர்மானத்தையும் சட்டை செய்யாது என எதிர்பார்க்கப்படுகிறது.இதுதொடர்பாக ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் உள்ளிட்ட 185 நாடுகள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தன என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா,இஸ்ரேல், பலாவு ஆகியவை எதிர்த்து வாக்களித்தன.

மைக்ரோனேசியா, மார்ஷல் தீவுகள் ஆகியவை நடுநிலை வகித்தன. கடந்த ஆண்டு 184 வாக்குகள் பெற்று இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.கியூபா மீதான தடையை நீக்க அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களான ஓபாமா மற்றும் மெக்கெய்ன் ஆகியோர் எதி்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மெக்கெய்ன், கியூபா மீதான தடையை மேலும் இறுக்கமாக்க வேண்டும் என வலியுறுத்திவருகிறார்.

ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம் ஒரு சம்பிரதாய தீர்மானமே தவிர இதை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.கியூப வெளியுறவு அமைச்சர் பெலிப்பி பெரேஸ் ரோக் இத்தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசுகையில், இந்தத் தடை நியாயமற்றது, சட்ட விரோதமானது என்றார்.

Tuesday, October 28, 2008


ஜாதிவாரியாக கணக்கெடுப்பு-உயர்நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 28, 2008

சென்னை: சமூக நீதி குறிக்கோளை அடைவதற்கு வசதியாக ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நீதித்துறையின் வரலாற்றில் முதன்முறையாக சமூக நீதியின் அடிப்படை அவசியத்தை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கி இருக்கிறது. 1931ம் ஆண்டிற்கு பின்னர் நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதிவாரியாக நடத்தப்படவில்லை என்பது ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கும் உண்மை.

இந் நிலையில் 1931ம் ஆண்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு விழுக்காட்டை மீண்டும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கேற்ப அதிகரிக்க வேண்டும் என்றும், இது சமூக நீதி குறிக்கோளை அடைவதற்கு தேவையென்றும் வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எலிபி தர்மா ராவ், எஸ்.தமிழ்வாணன் ஆகியோர் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்ளாக நடத்தி முடிக்க வேண்டும் என்றும், இது காலத்தின் தேவை என்றும் நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உயர்கல்வியில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்த போது, முதலில் அச்சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.அப்போது 1931ம் ஆண்டுக்கு பின்னர் ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்ற காரணத்தை சுட்டிக்காடி எந்த அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட உயர்வை கல்வி நிலையங்களில் வழங்கப்பட வேண்டும் என்ற முடிவிற்கு அரசு வந்தது எப்படி என்ற வினாவை உச்சநீதிமன்றம் எழுப்பியது.

அந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணையில் பாமக சார்பில் வாதிட்ட மூத்த வக்கீல் மக்கள் தொகை கணக்கெடுப்பை இனி ஜாதிவாரியாக நடத்த உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பில் இது தொடர்பாக எத்தகைய அறிவுறுத்தலையும், ஆணையையும் பிறப்பிக்கவில்லை.

பொதுவாக, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதிக் கொள்கைக்கு எதிரான வழக்குகளில் மனுதாரர்கள் கேட்காத கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் பல்வேறு நீதிமன்றங்கள் விதித்து வந்திருக்கின்றன.மண்டல் கமிஷன் வழக்கில் மனுதாரர் சார்பில் கோரப்படாத ஒரு நிபந்தனையை உச்சநீதிமன்றம் தானாகவே விதித்தது. கிரீமி லேயர் எனப்படும் அம்சத்தை நீதிமன்றம் தானாகவே வகுத்து அளித்திருக்கிறது.மேலும் இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்திற்கும் மேல் இருக்க கூடாது என்ற உச்ச அளவும் இதே டைமுறையில்தான் நீதிமன்றத்தால் புகுத்தப்பட்டது.

இப்படி சமூக நீதிக்கு பாதிப்பான காரியங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த நிலையில், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக எந்த தீர்ப்பும் வரவில்லையே என்ற கவலையும், ஏக்கமும் சமூக நீதி ஆர்வலர்கள் மத்தியில் இருந்து வந்தது. இப்போது சென்னை உயர்நீதிமன்றம் சமூக நீதி ஆர்வலர்களுக்கு ஆறுதலும், மகிழ்ச்சியும் தரும் தீர்ப்பினை வழங்கியிருக்கிறது.அந்த வழக்கைத் தொடர்ந்த மனுதாரரின் பணி அமர்த்தல் தொடர்பான பிரச்சினை என்றாலும், சமூக நீதியின் அடிப்படை அவசியத்தை உணர்ந்து நீதித்துறையின் வரலாற்றில் முதன்முறையாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இத்தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் இருவரும் இடஒதுக்கீட்டு வரலாற்றில் நிச்சயம் இடம்பெறுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.இட ஒதுக்கீட்டின் பலன் முழுமையாக கிடைக்க ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பாமக நீண்ட காலமாக வலியுறுத்தி வந்திருக்கிறது.இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த கோரிக்கைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் இந்த அறிவுறுத்தலை மத்திய அரசின் உள்துறை உடனடியாக ஏற்றுக் கொண்டு உரிய ஆணைகளை மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்திற்கு வழங்க வேண்டும்.

இட ஒதுக்கீட்டிலும், சமூக நீதியிலும் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகளும், தமிழக முதல்வரும் இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

Monday, October 27, 2008

நீதித்துறையில் இடஒதுக்கீடு-பாஸ்வான் கோரிக்கை

இந்து அமைப்புகள் நாட்டில் அமைதியை சீர்குலைத்து சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. மகாராஷ்டிர மாநிலம் மாலேகாவில் நடந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் பெண் சன்யாசி இருந்தது தெரியவந்துள்ளது.

மராட்டியத்தில் பால் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகியோர் முன்பு தென்னிந்தியர்கள் மீது வெறித் தாக்குதல் நடத்தினர். இப்போது வட இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.ஆர்எஸ்எஸ், சிவசேனா, விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளை தடை செய்ய வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களின் நலனை எதிர்ப்பவர்கள் நாட்டின் விரோதிகள். அயோத்திதாச பண்டிதர் தபால்தலையை வெளியிட வேண்டும். நீதித்துறை, தனியார் துறையில் இடஒதுக்கீடு வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நாட்டின் அனைத்து தலித் தலைவர்களையும் அழைத்து அடுத்த மாதம் 3ம் தேதி கருத்தரங்கு நடத்தவுள்ளேன் என்றார்.

குண்டுவெடிப்பு-2 ராணுவ வீரர்களுக்கு தொடர்பு!

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக பெண் சாமியார் கைதாதியுள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஒரு மேஜர் உள்பட இரு முன்னாள் ராணுவத்தினரும் பிடிபட்டுள்ளனர்.மாலேகானில் கடந்த மாதம் 29ம் தேதி சிமி அலுவலகம் முன்பு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 5 பேர் பலியா னார்கள். 90 பேர் படுகாயம் அடைந்தனர். இதேபோல குஜராத் மாநிலம் மோடாசா நகரிலும் குண்டுவெடித்தது. அதில் ஒருவர் பலியானார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிளில் மர்ம மனிதர்கள் வெடிகுண்டுகளை கட்டி எடுத்து வந்து வெடிக்க வைத்திருப்பது தெரிந்தது. டைமர் கருவி பொருத் தப்பட்டிருந்த அந்த வெடி குண்டு ஆர்.டி.எக்ஸ் மற்றும் அமோனியம் நைட்ரேட் கலவையால் தயாரிக்கப்பட்டிருந்தது.தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் இது பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார்கள். மோட்டார் சைக்கிளை ஆய்வு செய்த போது, அது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டிருப்பது தெரிந்தது.

பெண் துறவி பிரக்யா தாகூர்

இது தொடர்பாக போலீசார் சியாம் சாகு, திலீப்நாசர், சிவநாராயண்சிங் ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.அவர்கள் மூன்று பேரும் பெண் துறவி பிரக்யா தாகூர் என்பவருக்கு நெருக்கமானவர்கள். இவர் இந்து ஜாகிரன் மஞ்ச் அமைப்பைச் சேர்ந்தவர். பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், உமாபாரதி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் இந்து ஜாகிரண் மஞ்ச்சில் இணைந்த பின்னர் துறவியானார். பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். ராமஜென்மபூமி போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தேமாதரம் என்ற அமைப்பைத் தொடங்கினார். அதற்கு குஜராத் அரசு நிதியுதவி அளித்ததால், குஜராத் மாநிலம் சூரத்திற்கு இடம் மாறினார் பிரக்யா.மாலேகான் குண்டுவெடிப்பில் சிக்கிய மோட்டார் சைக்கிள் இவரது பெயரில்தான் பதிவாகியிருந்தது. இதையடுத்தே இவருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு இருக்கலாம் என்ற முடிவுக்கு போலீஸார் வந்தனர்.

சிமி இயக்கத்தினரை பழிக்குப் பழி வாங்க இந்த குண்டு வெடிப்புகளை பெண் சாமியார் உள்ளிட்ட குழு நடத்தி இருக்கலாம் என்று கருதப்பட்டது. இதை தொர்ந்து பெண் சாமியார் பிரக்யாவை போலீசார் கைது செய்தனர். இது சங் பரிவார் அமைப்புகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராணுவத்தினருக்கு தொடர்பு

இதற்கிடையே இந்த வழக்கில் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 2 வீரர்களும் கைதாகியுள்ளனர். இருவரும் தற்போது இந்து ராணுவப் பயிற்சிக் கழகம் என்ற பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறார்கள்.இந்த பயிற்சிப் பள்ளியில் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்று வகுப்புகள் நடத்தப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.அவர்களில் ஒருவர் பெயர் பிரபாகர் குல்கர்னி மற்றொருவர் பெயர் உபாத்யா. இவர் ராணுவத்தில் மேஜர் அந்தஸ்தில் பணியாற்றியவர்.

2 ராணுவ வீரர்களும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ஆவர்.வெடிகுண்டு தயாரிக்க இவர்கள் ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்தை சேகரித்து அனுப்பி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. கைதான பெண் சாமியார் உள்பட 2 ராணுவ அதிகாரிகளையும் போலீசார் விசாரணைக்காக மும்பை கொண்டு சென்றுள்ளனர்.அங்கு அவர்களிடம் தீவிர விசாரணையில் நடத்தியதில் குண்டு வெடிப்பில் இந்து அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ராணுவ அதிகாரிகள் குல்கர்னியும், உபாத்யேயும் நாசிக் அருகே ராணுவ பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வந்தனர். இந்த பயிற்சி மையத்தை இந்து ராணுவ கல்வி கழகம் நடத்தி வந்தது.அதில் வெடிகுண்டுகள் தயாரித்தல், வெடிகுண்டு களை கையாள்வது குறித்து இரு அதிகாரிகளும் பயிற்சி அளித்து வந்துள்ளனர். மற்றும் ஆயுதப் பயிற்சியும் கொடுத்தனர்.

இதற்கிடையே மாலேகானில் 2006-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பிலும் இந்து அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அதுகுறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Sunday, October 26, 2008

செய்தி துளிகள்

வைகோவை கைது செய்ய முதலில் அறிக்கை விட்டவர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதான் தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்

அமைதி இல்லாமல் நீடித்த வளர்ச்சியை அடைய முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

சென்னை: விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு செயல்பட்டு வரும் திமுக அரசை, மத்திய அரசு கலைப்பதுடன், முதல்வர் கருணாநிதியை கைது செய்ய வேண்டும் என அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்தில் வரும் 30ஆம் தேதி பிற்பகல் 1 மணியளவில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மலர் அஞ்சலி செலுத்த உள்ளார்.

பிரிவினையைத் தூண்டியதாகக் கூறி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை கைது செய்து சிறையில் அடைத்திருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து நாகர்கோயிலில் இன்று ஆர்ப்பாட்டம் செய்த அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.

புதுடெல்லி: இலங்கையில் தமிழர்களின் மீதான தாக்குதல் குறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவின் தூதர், பஸில் ராஜபக்சே நேற்றிரவு இந்தியா வந்தார்.

பிரதமர் சிறப்பு விமானம்: மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறலாம் என்ற தகவல்களை மறுத்த பிரதமர் மன்மோகன் சிங், பொதுத் தேர்தல் திட்டமிட்ட காலத்திலேயே நடைபெறும் என்றும, நாடாளுமன்ற நடவடிக்கைகள் முன்கூட்டியே தள்ளிவைக்கப்பட்டதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் உடன் மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி வைத்துக் கொள்ளாது என்று தெரிவித்த அக்கட்சியின் தலைவர் தேவகவுடா, அடுத்த சட்டமன்றத் தேர்தலின் போது பகுஜன்சமாஜ் கட்சியுடன் இணைந்து செயல்படுவோம் என்றார்.

தமிழர்கள் மீது இனப்படுகொலையை கட்டவிழ்த்துவிட்டுவரும் சிறிலங்க அரசிற்கு செய்துவரும் நேர்முக, மறைமுக இராணுவ உதவிகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.

தேசிய சமுதாய உதவித் திட்டத்திற்கு ம‌த்‌திய அரசு இதுவரை ரூ.1,734.87 கோடி நிதியை மாநிலங்களுக்கு அளித்து‌ள்ளது எ‌ன்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சந்திரசேகர் சாஹு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

பெங்களூர்: கன்னடத்திற்கு செம்மொழி அந்தஸ்து வழங்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து வலியுறுத்த முதல்வர் எதியூரப்பா தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுவினர் நவம்பர் 4ம் தேதி டெல்லி செல்கின்றனர்.

சென்னை: பிரிவினைவாதத்தைத் தூண்டும்படி நாங்கள் பேசவில்லை. இலங்கையில் செத்துக் கொண்டிருக்கும் எங்கள் உறவுகளுக்காக மனிதாபிமான அடிப்படையில்தான் குரல் கொடுத்தோம். அது தவறென்றால், அந்தத் தவறை மீண்டும் மீண்டும் செய்வோம் என்று இயக்குனர் அமீர் கூறினார்.

நாகர்கோவில்: ராஜிவ் கொலையாளி நளினியை பிரியங்கா சிறையில் சந்தித்த பின்னர்தான் தமிழ்நாட்டில் புலிகள் ஆதரவு குரல் அதிகரித்துவிட்டது என பாஜக மாநிலத் தலைவர் இல. கணேசன் கூறினார்.

சென்னை: வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கான்பூர்: கான்பூர் வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, அங்கு மாணவர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து கேன்டீனில் இருந்த மாணவர்களை சந்தித்து அவர் உரையாடி விட்டுச் சென்றார்.

சென்னை: விடுதலைப் புலிகளை அழிக்க முடியாது. அவர்களை அழித்து விட்டுத்தான் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று அதிபர் ராஜபக்சே கூறுவதை ஏற்க முடியாது. ராணுவ ரீதியிலான தீர்வு மிகக் கடினம். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளாக் கூறியுள்ளார்.

Saturday, October 25, 2008

ஹஜ் இடஒதுக்கீடு: அதிகரிக்க தமிழக எம்பி கோரிக்கை

வியாழக்கிழமை, அக்டோபர் 23, 2008

டெல்லி: தமிழகத்திலிருந்து ஹஜ் யாத்திரை செல்வோருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என பெரியகுளம் காங்கிரஸ் எம்.பி.யும், தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி தலைவருமான ஜே.எம். ஹாரூண் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து லோக்சபாவில் அவர் பேசுகையில், ஹஜ் பயணம் மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கான இட ஒதுக்கீடு குறைந்து கொண்டே வருகிறது. இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்காக 10 ஆயிரத்து 508 விண்ணப்பங்கள் வந்தன. ஆனால் மொத்தம் 3 ஆயிரத்து 181 பேருக்கு மட்டுமே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.எனவே தவறான கணக்குப்படி தமிழ்நாட்டிற்கு ஹஜ் இட ஒதுக்கீடு செய்யப்படுவது நியாயமற்றது. இது முஸ்லிம்களுக்கு அதிருப்பதியை ஏற்படுத்துகிறது. மக்கள் தொகை அடிப்படையில் ஹஜ் பயண ஒதுக்கீடு அளிப்பது சரியானது அல்ல.

அதற்கு பதிலாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஹஜ் விண்ணப் பங்களின் அடிப்படையில் பயண ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். முந்தைய ஆண்டு விண்ணப்பித்தும் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு அதற்கு அடுத்த ஆண்டில் இடம் கிடைக்க செய்யும் முறை பின்பற்றப்பட வேண்டும் என்றார் அவர்.

ஹஜ் யாத்ரீகர்களுக்கு தமிழக அரசு பயிற்சி

சென்னை: ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகளுக்கு பயிற்சி நடத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:2008-ம் ஆண்டில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த புனித பயணிகளுக்கு சென்னையில் புத்தறிவுப் பயிற்சி முகாம் நடத்த தமிழ்நாடு மாநில ஹஜ் குழு கருதியுள்ளது.

இந்த பயிற்சியின் போது சவூதி அரேபியாவில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், பயண விவரங்கள், ஹஜ் பற்றிய வழிமுறைகள், ஹஜ் குழு மற்றும் ஜெட்டாவிலுள்ள இந்திய துணை தூதரகத்தின் இதர ஏற்பாடுகள் மற்றும் தகவல்கள் பற்றி விரிவாக விளக்கி கூறப்படும்.இந்த பயிற்சி முகாம், தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொஸைட்டியின் உதவியுடன் நடத்தப்படுகிறது.

27-ந் தேதி (தமிழ்) மற்றும் 28-ந் தேதி (உருது) ஆகிய தேதிகளில் தமிழ்நாடு பைத்துல் ஹுஜ்ஜாஜ், (ஹஜ் ஹவுஸ்), எண்.2, டிமெல்லோஸ் ரோடு, சூளை, சென்னை-600112 என்ற முகவரியில் நடைபெறும்.இப்பயிற்சி முகாம்களில், பெண் புனித பயணிகள் உட்பட அனைத்து ஹஜ் பயணிகளும் (தேர்வு செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டவர்கள்) கலந்து கொள்ளுமாறும், அதன்மூலம் ஹஜ் பயணத்திற்கான விதிமுறைகள், வழிவகைகள் மற்றும் நடைமுறைகளை விரிவாக தெரிந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பன்னாட்டு பாஸ்போர்ட்டில் தனியார் ஹஜ் நிறுவனங்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பவர்களும் விரும்பினால் இப்புத்தறிவு பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம்.இந்த பயிற்சி முகாம்களை நடத்துவதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களை மாநில ஹஜ் குழு அனுப்பி வைக்க உள்ளது. ஹஜ் மற்றும் உம்ரா நிறைவேற்றுவது பற்றிய விளக்கங்களை ஆலிம்கள் அளிப்பார்கள்.

இது குறித்து மேலும் விவரங்களை அறிய தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவை 044-28252519 மற்றும் 044-28227617 ஆகிய தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி துளிகள்

சென்னை: சென்னை கொடுங்கையூரில் ராஜிவ் காந்தியின் சிலை உடைக்கப்பட்டது. இதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு்ள்ளனர்.

சென்னை: ராஜீவ் காந்தியின் சிலை உடைகப்பட்டுள்ளதன் மூலம் தமிழகத்தில் விடுதலைப் புலிகள் துணிச்சலாக நடமாடிக் கொண்டிருப்பது உறுதிப்படுத்துகிறது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மெல்போர்ன்: சச்சின் டெண்டுல்கர் ஒரு பொய் சொல்லி. மிகவும் மோசமான ஆட்டக்காரர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறைஸ்ட் கூறியுள்ளது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி: ஒரிஸ்ஸாவில் நடந்த கலவரத்தின்போது தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அந்த அயோக்கியர்கள் மீது சிபிஐ நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரீ கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மதுரை: விடுதலைப் புலிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த சுப்ரமணியம் சுவாமி தலைமையிலான தமிழக ஜனதாக் கட்சியின் மதுரை அலுவலகத்தை புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினர் மற்றும் வக்கீல்கள் அடங்கிய குழுவினர் இன்று தாக்கி சூறையாடினர்.

சென்னை: சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கியிருந்த ரூ. 196.37 கோடி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு எனும் பெயரில் பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோரை இன்று போலீஸார் அவர்களது வீடுகளில் வைத்துக் கைது செய்தனர்.

புதுடெல்லி: நாட்டில் 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், டிசம்பர் 10ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நடவடிக்கைகளும் ஒத்திவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி: இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதற்கு பொறுப்பேற்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியான பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.

ரா‌ஜீ‌வ் கா‌‌ந்‌தி கொலை வழ‌க்‌கி‌ல் ஆயு‌ள் த‌ண்டனை அனுப‌வி‌த்து வரு‌ம் ந‌ளி‌‌னி பொது ம‌ன்‌னி‌ப்பு‌க் கோ‌ரி தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ள மே‌ல்முறை‌யீ‌ட்டு ம‌னுவை ஏ‌ற்று த‌மிழக அரசு‌க்கு உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌‌ம் தா‌க்‌கீது அனு‌ப்‌பியு‌ள்ளது.

நாட்டிலேயே முதலாவதாக கருப்பை புற்றுநோய்க்கு கார்டாசில் என்ற தடுப்பூசி சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மாலேகான் குண்டுவெடிப்பு: இந்து அமைப்பே காரணம்?
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 24,

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு இந்து ஜாகிரன் மஞ்ச் என்ற இந்து அமைப்பே காரணம் என கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் துறவி என்று கூறப்படுகிறது.மாலேகான் நகரில் கடந்த செப்டம்பர் 29ம் தேதி குண்டுவெடிப்பு நடந்தது.அதே நாளில், குஜராத் மாநிலம் மோடாசா நகரிலும் குண்டுவெடித்தது. இதில் மொத்தமாக 6 பேர் உயிரிழந்தனர். மாலேகானில் 5 பேர் இறந்தனர்.இரு சம்பவங்களிலும் மோட்டார் சைக்கிள்களில் குண்டுகள் வைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் மிக்க பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தன.இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக கைதாகியுள்ளனர் என்று மாலேகான் நகர காவல்துறை இணை ஆணையர் ஹேமந்த் கர்கரே தெரிவித்துள்ளார். மேல் விவரங்களை அவர் தெரிவிக்க மறுத்து விட்டார்.கைது செய்யப்பட்ட 3 பேரும் நாசிக் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.முன்னதாக ஷியாம் சாஹு, திலீப் நஹர், சிவநாராயணன் சிங் மற்றும் தர்மேந்திரா பைராகி ஆகிய நான்கு பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வந்தனர். இவர்கள் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் ேசர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்து அமைப்பே காரணம்?

இதற்கிடைேய, இந்து ஜாகிரண் மஞ்ச் என்ற இந்து அமைப்பே மாலேகான் குண்டுவெடிப்புக்குக் காரணம் என கூறப்படுகிறது. ஆனால் இதை இந்து ஜாகிரண் மஞ்ச் அமைப்பு மறுத்துள்ளது.இருப்பினும் கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் பிரக்யா சிங் தாக்கூர் என்கிற துறவி என்று கூறப்படுகிறது.மாலேகான் குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் (இதில்தான் குண்டு வைக்கப்பட்டிருந்தது) சூரத்தைச் ேசர்ந்த ஒருவருக்கு சொந்தமானது. இவருக்கு இந்து அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இங்கிருந்துதான் மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பான பல முக்கிய துப்புக்கள் போலீஸாருக்குக் கிடைத்தன.மோடாசா குண்டுவெடிப்புக்கும் இந்து ஜாகிரண் மஞ்ச்தான் காரணமாக இருக்கும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

பாஜக மறுப்பு:இந்து ஜாகிரண் மஞ்ச் அமைப்புக்கு தீவிரவாத தாக்குதலில் சம்பந்தம் இல்லை என்று பாஜக மறுத்துள்ளது.இதுகுறித்து பாஜக பொதுச் செயலாளர் கோபிநாத் முண்டே கூறுகையில், இந்து அமைப்புகளுக்கு மாலேகான் குண்டுவெடிப்பில் எந்தத் தொடர்பும் இல்லை.குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இந்து அமைப்புகளை தொடர்புபடுத்த முடியாது என்றார்.


ஆனால் சிபிஎம் எம்.பி. பிருந்தா காரத், இந்து அமைப்புகள்தான் மாலேகான் குண்டுவெடிப்புக்குக் காரணம் என அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் போலீஸார் கைது செய்துள்ள நபர்கள் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள். எனவே இதை யாரும் மறுக்க முடியாது என்றார் அவர்.

Thursday, October 23, 2008

'கோத்ரா': 134 பேர் மீதான பொடா வழக்கு ரத்து-உச்ச நீதிமன்றம் அதிரடி, அக்டோபர் 21, 2008

டெல்லி: கோத்ரா ரயி்ல் தீ வழக்கில் 134 பேர் மீது தீவிரவாத எதிர்ப்பு சட்டமான பொடா சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோத்ராவில் 2002ம் ஆண்டு கர சேவகர்கள் சென்ற ரயிலில் ஏற்பட்ட தீயில் 59 அப்பாவி பக்தர்கள் பலியாயினர். இதையடுத்து குஜராத்தில் நடத்த பயங்கர மதக் கலவரத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.இந் நிலையில் ரயிலுக்கு தீ வைத்ததாகக் கூறி 134 முஸ்லீம்களை குஜராத் மாநில அரசு பொடா சட்டத்தில் கைது செய்தது.

இதில் 83 பேர் எந்தவித விசாரணையும் இன்றி தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.ஆனால், அவர்களை பொடா சட்டத்தில் கைது செய்தது செல்லாது என மத்திய பொடா மறுபரிசீலனைக் கமிட்டி உத்தரவிட்டது.ஆனாலும் அவர்களை தொடர்ந்து குஜராத் மாநில அரசு சிறையில் வைத்துள்ளது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக சிறையில் உள்ள அவர்கள், தங்கள் மீதான பொடா வழக்குகளை கமிட்டி ரத்து செய்துவிட்டதால் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அங்கு அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து உச்ச நீதிமன்றத்தை நாடினர்.இந்த மனுக்கள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதி ரவீந்திரன், நீதிபதி தல்வீர் பண்டாரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணக்கு வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள்,பொடா மறுபரிசீலனைக் கமிட்டியின் பரிந்துரைகளை மாநி்ல அரசும், விசாரணை நீதிமன்றமும் ஏற்க வேண்டும். இந்த கமிட்டியின் பரிந்துரைகள் தன்னைக் கட்டுப்படுத்தாது என்ற குஜராத் அரசின் வாதத்தை நிராகரிக்கிறோம்.இதனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தி்ன் கீழ் தான் விசாரணை நடத்த முடியும்.பொடா கமிட்டியின் பரிந்துரைகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வேண்டுமானால் குஜராத் அரசு மேல் முறையீடு செய்யலாம். அங்கு அந்தப் பரிந்துரைகள் ரத்து செய்யப்பட்டால் தான் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு்க்க முடியும் என்று தீர்ப்பளித்தனர்.இதன்மூலம் 83 பேரும் ஜாமீனில் வெளியே வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இடதுசாரிகள் வரவேற்பு:உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை இடதுசாரிக் கட்சிகள் வரவேற்றுள்ளன.பொடா சட்டம் சிறுபான்மையினருக்கு எதிராகவே முழுக்க முழுக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. குஜராத்தில் இந்த சட்டத்தின் கீழ் சிறுபான்மையின குழந்தைகள் கூட கைது செய்யப்பட்டனர். இந் நிலையி்ல் இந்தத் தீர்ப்பு சிறுபான்மையினருக்கு நம்பி்க்கையையும் புதிய ஒளியையும் தந்துள்ளது.

பொடா எந்த அளவுக்கு குஜராத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து முழு அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்ட் பிளாக் கட்சிகளின் தலைவர்கள் கூறியுள்ளனர்.

செய்தி துளிகள்



டெல்லி: மத்திய அரசில் தமிழகத்தைச் சேர்ந்த 13 அமைச்சர்கள் இருந்தபோதிலும் இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்யப்பட்டுள்ளன. இதை கூட்டணியின் முக்கிய கட்சியான திமுக தடுக்கவில்லை என நாடாளுமன்றத்தில் அதிமுக குற்றம் சாட்டியது. இதையடுத்து திமுக-அதிமுக எம்பிக்களிடையே மோதல் ஏற்பட்டது.



கடலூர்: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் கொடும்பாவியை காங்கிரஸ் கட்சியினர் எரித்தனர். இதை கண்டித்து விடுதலைச் சிறுத்தை கட்சியினர் கோஷமிட்டனர். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.



சென்னை: விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்கள் தமிழ் துரோகிகள் என்றால், விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் தேசத் துரோகிகள் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.



சென்னை: தமிழக சட்டசபை நவம்பர் முதல் வாரத்தில் கூடும் எனத் தெரிகிறது. தமிழக சட்டசபையின் மழைக்காலக் கூட்டத் தொடர் நவம்பர் முதல் வாரத்தில் கூட்டப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு வாரம் வரை நடைபெறலாம் எனத் தெரிகிறது. மின்வெட்டுப் பிரச்சினையும், இலங்கைப் பிரச்சினையும் பெருமளவில் இருப்பதால் இவை இரண்டும் சட்டசபையைக் கலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட மற்ற பிரச்சினைகளும் சட்டசபை விவாதத்தை சூடாக்கும் எனத் தெரிகிறது



டெல்லி: கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. அங்கு இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கக் கூடாது. இருப்பினும், இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க வழி செய்யும் விதமாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.



கொழும்பு: இலங்கை தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் நானே முதல் ஆளாக களத்தில் நிற்பேன். இதற்காக நாடு முழுவதும் இளைஞர்களை திரட்டுவேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.



டெல்லி: விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை நடத்தி வரும் தாக்குதலில், தமிழர்களின் உரிமைகளையும், நலனையும் நசுக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.



டெல்லி: விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் கட்சிகளுடன் காங்கிரஸ் எந்த உறவும் வைத்துக் கொள்ளாது என அக் கட்சியின் தமிழகத் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.



சென்னை: இலங்கைத் தமிழர்கள் சகல உரிமைகளோடு வாழ்வதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் கூட்டாட்சி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் எ‌ன்று‌ம், பிரதமர் மன்மோகன்சிங் இன்னும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று‌ம் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.



பெங்களூர்: இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் மூன்றாவது காலாண்டு லாபம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 19 சதவிகிதம் அதிகரித்துள்ளது.



சென்னை: வீடுகளில் 2 மாதங்களுக்கு 600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோர் அதை 20 சதவீதம் அளவுக்குக் குறைக்க வேண்டும். அதற்கு மேல் பயன்படுத்துவோரிடம் 50 சதவீதம் அளவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்



ஸ்ரீஹரிகோட்டா: சந்திராயன்-1 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதைத் தொடர்ந்து வரும் 2015ஆம் ஆண்டுக்குள் இந்தியரை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.



மு‌ம்பை : மகாரா‌ஷ்டிரா ந‌வ ‌நி‌ர்மா‌ண் சேனா தலைவ‌ர் ரா‌‌ஜ்தா‌க்கரே கைது செ‌ய்‌ய‌ப்‌ப‌ட்டதை‌த் தொட‌ர்‌ந்து ஏ‌ற்ப‌ட்ட வ‌ன்முறை-கலவர‌த்‌தி‌ல் 3 பே‌ர் ப‌லியானா‌ர்க‌ள். கலவர‌ம் தொட‌ர்பாக 179 பே‌ர் கைது செ‌ய்‌ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.



தானே : மரா‌ட்டிய மா‌நில‌ம் தானே மாவ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ள க‌ல்யா‌‌‌ண் பகு‌தி‌யி‌ல் ஏ‌ற்ப‌ட்ட கலவ‌ர‌த்‌தி‌ல் 3 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதையடு‌த்து அ‌ப்பகு‌தி‌யி‌ல் ‌நிலைமையை‌க் க‌‌ட்டு‌க்கு‌ள் கொ‌ண்டுவர இ‌ன்று காலை 11 ம‌ணிமுத‌ல் ஊரட‌ங்கு உ‌த்தரவு அம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.



பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் அதிக அளவு பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 24 பேர் உயிரிழந்தனர்.



புதுடெ‌ல்‌லி : இ‌ந்‌தியா‌வி‌ல் அ‌ங்‌கீக‌ரி‌க்க‌‌ப்ப‌ட்ட க‌ல்லூ‌‌ரிக‌ள் மொ‌த்த‌ம் 6,999 உ‌ள்ளதாக ம‌த்‌திய அரசு பாராளும‌ன்ற‌த்‌தி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.




மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இன்றிரவு நடந்த குண்டுவெடிப்பில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இம்பாலில் உள்ள மணிப்பூர் அதிரடிக் காவல்படை வளாகத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு, இரவு சுமார் 8 மணியளவில் வெடித்துச் சிதறியதாகவும், இதில் நிகழ்விடத்திலேயே 13 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tuesday, October 21, 2008

செய்தி துளிகள்

கொழும்பு: விடுதலைப் புலிகள் தோற்பது நிச்சயம். அதை தடுப்பதற்காக தமிழகத் தலைவர்களை கேடயமாக பயன்படுத்த முயற்சிப்பதாக அதிபர் ராஜபக்சேயின் சகோதரரும், இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளருமான கோதபயா ராஜபக்சே கூறியுள்ளார்.

சென்னை: வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்துக்கு புதிய கட்டுப்பாடுகளை தமிழக மின்வாரியம் கொண்டு வருகிறது. இதன்படி 2 மாதங்களுக்கு 600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோர் அதை 20 சதவீதம் அளவுக்குக் குறைக்க வேண்டும். அதற்கு மேல் பயன்படுத்துவோரிடம் 50 சதவீதம் அளவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு நவம்பர் 1ம் தேதி முதல் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.

டெல்லி: இந்த ஆண்டு நாடாளுமன்றம் இதுவரை வெறும் 32 நாட்கள் மட்டமே கூடியுள்ளது. இது இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிகக் குறைவான நாட்களாகும்.

லண்டன்: நெதர்லாந்து நாட்டின் மிகப் பிரபலமான வங்கியான ஐஎன்ஜி முதல்முறையாக பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. உலகில் இப்போது நிலவும் பெருமந்தம் காரணமாக பல நாடுகளின் நிதி அமைப்புகளும் சீட்டுக்கட்டு மாளிகை போல சரிந்து வருகின்றன. அமெரிக்கா மட்டுமல்லாமல் ஐரோப்பாவிலும் இதேநிலைதான். இங்கிலாந்தின் பல வங்கிகள் திவாலாகும் கட்டத்தில் நிற்கின்றன. அரசு அவற்றுக்கு 'பெய்ல் அவுட்' கொடுத்து கைதூக்கப் பார்க்கிறது. முடியாவிட்டால் அரசுடைமையாக்கி 'பார்ட் பார்ட்'டாக விற்றுவிட முடிவு செய்துள்ளது பிரிட்டிஷ் அரசு!

புதுடெ‌ல்‌லி: ந‌ட‌ப்பா‌ண்டி‌ன் ஏ‌‌ப்ர‌ல் முத‌ல் செ‌‌ப்ட‌ம்ப‌ர் வரை‌யிலான கால‌த்‌தி‌ல் சர‌க்கு‌ப் போ‌க்குவர‌த்து மூல‌மாக ர‌யி‌ல்வே துறை‌‌க்கு ‌கிடை‌த்து‌ள்ள வருவா‌ய் 18.91 ‌விழு‌க்காடு அ‌திக‌ரி‌த்து‌ள்ளது எ‌ன்று ம‌த்‌திய அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

சட்டீஸ்கார் மாநிலத்தில் நக்ஸலைட்டுகள் நடத்திய கண்ணி வெடி மற்றும் துப்பாக்கிச் சண்டையில் மத்திய கூடுதல் காவற்படையைச் (CRPF) சேர்ந்த 12 காவலர்கள் கொல்லப்பட்டனர், மேலும் 10 பேர் காயமுற்றனர்.

ஆட்கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பாபுபாய் கட்டாராவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க மக்களவை குழு பரிந்துரைத்துள்ளது.

புதுடெ‌ல்‌லி: நா‌ட்டிலு‌ள்ள 500 தொ‌ழி‌ற் ப‌யி‌‌ற்‌சி மைய‌ங்க‌ள் (ITIs) மே‌ம்படு‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று ம‌த்திய தொ‌ழிலாள‌ர் நல‌ன் ம‌ற்றும் வேலைவா‌ய்‌ப்பு‌த் துறை இணையமை‌ச்ச‌ர் ஆ‌ஸ்கா‌ர் பெ‌‌ர்ணா‌ன்ட‌ஸ் தெ‌ரிவி‌த்து‌ள்ளா‌ர்.

ஸ்ரீஹரிகோட்டா : நிலவை ஆய்வை செய்ய இந்திய வானியல் ஆய்வு மையம் (இஸ்ரோ) அனுப்பும் சந்திராயன்-1 விண்கலம், நமது நாட்டின் தேசக் கொடியை நிலவில் பதிக்கும் என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளார்.

புதுடெல்லி: அணு உலைகள் கட்டுவது உட்பட அணு சக்தித் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த பல்வேறு விஷயங்களை ரஷ்யாவுடன், இந்தியா விவாதித்துள்ளது.

புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2003 நவம்பரில் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை, பாகிஸ்தான் 58 முறை மீறியுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி: பிரதமர் மன்மோகன்சிங் ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இத‌ற்காக இ‌ன்று காலை அவ‌ர் ஜப்பான் தலைநகர் டோக்கியோ புற‌ப்ப‌ட்டு‌ச் செ‌‌ன்றா‌ர்.

செ‌ன்னை: சேது சமுத்திர ‌தி‌ட்ட‌‌த்தை தடு‌த்தே ‌தீருவே‌ன் எ‌ன்று சொ‌ல்லு‌ம் அ.‌தி.மு.க.வை ம‌க்‌க‌ள் வைக்க வேண்டிய இடத்திலே வை‌ப்பதோடு, அவர்களை ஒதுக்க வேண்டிய இடத்திற்கு ஒதுக்க வேண்டும்'' எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கே‌‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

செ‌ன்னை: ஆலயத் திருவிழாக்கள் தவிர தனியார் நடத்தும் விழாக்களுக்கு ஆடம்பர விளக்குகள் பயன்படுத்தும் பொழுது மின்சார வாரியத்திடம் இருந்து மின்சாரம் வழங்கப்படமாட்டாது எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

''இலங்கை‌த் தமிழர் பிரச்சனைக்கு தனித்தமிழ் ஈழமே தீர்வு என்று கூறுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஏற்கவில்லை'' என்று அக்கட்சி மா‌‌நில‌ச் செயல‌ர் எ‌‌ன்.வரதராஜ‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

Monday, October 20, 2008

பசியால் 6 விநாடிக்கு ஒரு குழந்தை பலி


நியூயோர்க்: பசியால் 6 விநாடிக்கு ஒரு குழந்தை பலியாவதாக ஐ.நா.செயலாளர்நாயகம் பான் கீ.மூன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


உலக உணவு தினத்தையொட்டி நியூயோர்க்கில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், உணவுப் பற்றாக்குறையை போக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். சர்வதேச பொருளாதார நெருக்கடி, வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், பின்தங்கிய நாடுகள் என்ற பாகுபாடின்றி உலக நாடுகள் அனைத்தையும் வெகுவாக பாதித்துள்ளது. இந்த சூழ்நிலையில் உணவுப் பற்றாக்குறை பிரச்சினையும் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கி உள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 80 கோடி மக்கள் இரவில் உணவின்றி தூங்கச் செல்வதை பழக்கப்படுத்தி கொண்டுள்ளனர்.

தற்போது எரிபொருள் மற்றும் உணவுப் பொருள் விலை உயர்வால் மேலும் 10 கோடி பேர் பசிப்பள்ளத்தாக்கில் தள்ளப்படும் அபாயம் உருவாகி உள்ளது. வரும் 2015 ஆம் ஆண்டுக்குள் பசியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க ஐ.நா.சபை இலக்கு நிர்ணயித்துள்ளது. இது மனித வாழ்வின் உயிர் ஆதார பிரச்சினை. ஐ.நா.சபையின் இந்த முயற்சிக்கு உலக நாடுகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


ஐ.நா.சபையின் உலக உணவுத் திட்டத்தின் செயல் இயக்குநர் ஜோசட்டி பேசும்போது, எரிபொருள் விலை உயர்வு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் 100 கோடி மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர் என்று தெரிவித்தார்.

தனிமனிதன் ஒவ்வொருவருக்கும் உணவு கிடைக்கச் செய்வது சர்வதேச சமுதாயத்தின் கடமை. நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் பசியில் வாடுவதை நிறுத்த வேண்டும். இதற்காக, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உணவு உற்பத்தியை பன்மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று அவர் யோசனை கூறினார்.

ஐ.நா.சபை சார்பில் அக்டோபர் 16 ஆம் திகதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1945 ஆம் ஆண்டு ஐ.நா.சபையில் உணவு மற்றும் விவசாயக் கழகம் தொடங்கப்பட்டது முதல் உலக உணவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.