செய்தி துளிகள்
கொழும்பு: விடுதலைப் புலிகள் தோற்பது நிச்சயம். அதை தடுப்பதற்காக தமிழகத் தலைவர்களை கேடயமாக பயன்படுத்த முயற்சிப்பதாக அதிபர் ராஜபக்சேயின் சகோதரரும், இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளருமான கோதபயா ராஜபக்சே கூறியுள்ளார்.
சென்னை: வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்துக்கு புதிய கட்டுப்பாடுகளை தமிழக மின்வாரியம் கொண்டு வருகிறது. இதன்படி 2 மாதங்களுக்கு 600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோர் அதை 20 சதவீதம் அளவுக்குக் குறைக்க வேண்டும். அதற்கு மேல் பயன்படுத்துவோரிடம் 50 சதவீதம் அளவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு நவம்பர் 1ம் தேதி முதல் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.
டெல்லி: இந்த ஆண்டு நாடாளுமன்றம் இதுவரை வெறும் 32 நாட்கள் மட்டமே கூடியுள்ளது. இது இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிகக் குறைவான நாட்களாகும்.
லண்டன்: நெதர்லாந்து நாட்டின் மிகப் பிரபலமான வங்கியான ஐஎன்ஜி முதல்முறையாக பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. உலகில் இப்போது நிலவும் பெருமந்தம் காரணமாக பல நாடுகளின் நிதி அமைப்புகளும் சீட்டுக்கட்டு மாளிகை போல சரிந்து வருகின்றன. அமெரிக்கா மட்டுமல்லாமல் ஐரோப்பாவிலும் இதேநிலைதான். இங்கிலாந்தின் பல வங்கிகள் திவாலாகும் கட்டத்தில் நிற்கின்றன. அரசு அவற்றுக்கு 'பெய்ல் அவுட்' கொடுத்து கைதூக்கப் பார்க்கிறது. முடியாவிட்டால் அரசுடைமையாக்கி 'பார்ட் பார்ட்'டாக விற்றுவிட முடிவு செய்துள்ளது பிரிட்டிஷ் அரசு!
புதுடெல்லி: நடப்பாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் சரக்குப் போக்குவரத்து மூலமாக ரயில்வே துறைக்கு கிடைத்துள்ள வருவாய் 18.91 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சட்டீஸ்கார் மாநிலத்தில் நக்ஸலைட்டுகள் நடத்திய கண்ணி வெடி மற்றும் துப்பாக்கிச் சண்டையில் மத்திய கூடுதல் காவற்படையைச் (CRPF) சேர்ந்த 12 காவலர்கள் கொல்லப்பட்டனர், மேலும் 10 பேர் காயமுற்றனர்.
ஆட்கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பாபுபாய் கட்டாராவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க மக்களவை குழு பரிந்துரைத்துள்ளது.
புதுடெல்லி: நாட்டிலுள்ள 500 தொழிற் பயிற்சி மையங்கள் (ITIs) மேம்படுத்தப்படும் என்று மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஆஸ்கார் பெர்ணான்டஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டா : நிலவை ஆய்வை செய்ய இந்திய வானியல் ஆய்வு மையம் (இஸ்ரோ) அனுப்பும் சந்திராயன்-1 விண்கலம், நமது நாட்டின் தேசக் கொடியை நிலவில் பதிக்கும் என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளார்.
புதுடெல்லி: அணு உலைகள் கட்டுவது உட்பட அணு சக்தித் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த பல்வேறு விஷயங்களை ரஷ்யாவுடன், இந்தியா விவாதித்துள்ளது.
புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2003 நவம்பரில் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை, பாகிஸ்தான் 58 முறை மீறியுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: பிரதமர் மன்மோகன்சிங் ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று காலை அவர் ஜப்பான் தலைநகர் டோக்கியோ புறப்பட்டுச் சென்றார்.
சென்னை: சேது சமுத்திர திட்டத்தை தடுத்தே தீருவேன் என்று சொல்லும் அ.தி.மு.க.வை மக்கள் வைக்க வேண்டிய இடத்திலே வைப்பதோடு, அவர்களை ஒதுக்க வேண்டிய இடத்திற்கு ஒதுக்க வேண்டும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.
சென்னை: ஆலயத் திருவிழாக்கள் தவிர தனியார் நடத்தும் விழாக்களுக்கு ஆடம்பர விளக்குகள் பயன்படுத்தும் பொழுது மின்சார வாரியத்திடம் இருந்து மின்சாரம் வழங்கப்படமாட்டாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
''இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தனித்தமிழ் ஈழமே தீர்வு என்று கூறுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஏற்கவில்லை'' என்று அக்கட்சி மாநிலச் செயலர் என்.வரதராஜன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment