Monday, October 20, 2008

செய்தி துளிகள்

சென்னை: இலங்கை தமிழர் பிரச்சினை தொட‌ர்பாக இ‌ந்‌திய யூ‌னிய‌ன் மு‌ஸ்‌லி‌ம் ‌லீ‌க் க‌ட்‌சியை‌ச் சே‌ர்ந்த ம‌க்களவை உறு‌ப்‌பின‌ர் காத‌ர் மொ‌கி‌‌‌தீனு‌ம் பத‌வி ‌விலக‌‌ல் கடித‌த்தை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌யிட‌ம் கொடு‌த்தா‌ர். தயாநிதி மாறன் தனது எம்.பி. பதவி ராஜினாமா கடிதத்தை நேற்று முதல்-அமைச்சர் கருணாநிதியை நேரில் சந்தித்து கொடுத்தார்.

ச‌த்ரா: ஜா‌ர்க‌ண்‌ட் மா‌நில‌ம் ச‌த்ரா மாவ‌ட்ட‌த்‌தி‌ல் மாவோ‌‌யி‌ஸ்‌டு‌களுக்கு‌ம் அ‌தி‌லிரு‌ந்து ‌பி‌ரி‌ந்து செ‌ன்ற ‌தி‌ரி‌திய ‌பிர‌ஸ்துதி க‌மி‌ட்டி (TPC) இய‌க்க‌த்‌தினரு‌க்கு‌ம் இடையே நட‌ந்த து‌ப்பா‌க்‌‌கி‌ச் ச‌ண்டை‌யி‌ல் மாவோ‌யி‌‌ஸ்‌ட் ‌தீ‌விரவா‌தி ஒருவ‌ர் சு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர்.

புதுடெல்லி: வரும் திங்களன்று ரஷ்ய அயலுறவு அமைச்சர் செர்ஜீய் லாவ்ரோவ் இந்தியா வருகிறார். அப்போது ரஷ்யாவுடன் சமூக நலத்திற்கான அணு ஒத்துழைப்பு குறித்து இந்தியா விவாதிக்கவுள்ளது.

சென்னை: தேமுதிக வளர்ச்சியைப் பார்த்த மற்ற கட்சிகள் கதிகலங்கி நிற்கின்றன என்று விஜயகாந்த் மனைவி பிரேமலதா தெரிவித்தார்.

கொழும்பு: "இலங்கை, இந்தியாவின் மாநிலமல்ல; எங்களை அடக்கி ஆள முயலக்கூடாது. இந்தியாவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம்' என, சிங்கள கட்சிகளில் ஒன்றான தேசிய விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

டெல்லி: தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த ப்ரியரஞ்சன் தாஸ் முன்ஷி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் நலம் பெற்றுத் திரும்பி வரும் வரை அவரது இலாகாவை மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஆனந்த் ஷர்மா கவனிப்பார் என குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோ: ரேபரேலியில் ரயில் பெட்டி தொழிற்சாலை அமைப்பதர்ர்காக் ஒதுக்கப்பட்ட நிலத்தை திரும்ப பெற்ற உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி அந்த நிலத்தை மீண்டும் ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார்.

கொழும்பு: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரமான அக்கராயன்குளத்தைப் பிடித்துவிட்டதாக இலங்கை ராணுவ அமைச்சகம் சற்று நேரத்துக்கு முன் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு: புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் போர் நடந்து வரும் வன்னிப் பகுதியில் ஐ.நா. சபையின் பல்வேறு அமைப்புகள் 750 டன் உணவுப் பொருட்களை நேற்று தமிழர்களுக்கு விநியோகித்தன.

கொழும்பு: இலங்கையில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்கள் நிலை பற்றியும் போர் நடவடிக்கைகள் குறித்தும் இந்தியாவுக்கு விளக்க இலங்கை அதிபர் ராஜபக்ஷே அடுத்த வாரம் தனி தூதர் ஒருவரை புதுடெல்லிக்கு அனுப்பி வைக்கிறார்.

மும்பை: மும்பையில் ரயில்வே தேர்வு எழுத வந்த வடமாநில மாணவர்கள் மீது ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவ நிர்மாண் கட்சினர் பயங்கரமாக தாக்குதல் நடத்தினர். அவர்களை தேர்வு எழுத முடியாமல் செய்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

No comments: