செய்தி துளிகள்
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண ஐக்கிய நாடுகள் சபையும் அதன் அங்கமான சர்வதேச செலாவணி நிதியமும் (ஐஎம்எஃப்)தவறிவிட்டன. இத்தகைய நிதி நெருக்கடியால் வளரும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் தலைமையில் நடை பெற்ற ஆண்டு ஆய்வு கூட்டத்தில் இந்திய தூதர் நிருபம் சென் இக்கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பஜ்ரங் தளம் அமைப்பு 'சிமி'யைப் போன்ற ஒரு தீவிரவாத அமைப்பு என்றும், அதனை தடை செய்ய மத்திய அரசு தயங்காது என்றும் மத்திய உளதுறை இணையமைச்சர் ஷகீல் அகமத் தெரிவித்துள்ளார்.
ஈரோடு: ஈரோட்டில் ரூ.120 கோடி செலவில் உயர்தொழில்நுட்ப நெசவு பூங்கா அடுத்த மாதம் பணி துவங்க உள்ளது.இந்த பூங்காவில் தொழில் தொடங்குவோருக்கு மின்கட்டண சலுகை வழங்குவதுடன் 40 விழுக்காடு மானியமும் வழங்கப்படுகிறது. ரூ.118 கோடி செலவில் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான பணிகள் அடுத்த மாதம் துவங்குவதாக ஈரோடு உயர்தொழில்நுட்ப ஜவுளி பூங்கா நிர்வாக இயக்குனர் மாரப்பன் கூறினார்.
சென்னை: சென்னை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயின்று பட்டம் பெற்ற மாணவர்களுக்கான இலவச வேலைவாய்ப்பு முகாம் வரும் 10,11ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது
தேனி: தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 3 பேரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை : ''மதவெறி சக்திகளின் கொடூரமான போக்கை தடுக்க மதசார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்'' என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உதல்கிரி : அசாம் மாநிலத்தில் இரு பிரிவு மக்களுக்கு இடையே நடந்து வரும் கலவரம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த மோதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை: மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் அங்கு 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் இரு ஜாதியினருக்கிடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. உத்தபுரத்தில் இருந்த தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டதை அடுத்து தலித் மக்களுக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இடையை அங்கு அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
டெல்லி: பாலஸ்தீனத்திற்கு இந்தியா 20 மில்லியன் டாலர் நிதியுதவியை அறிவித்துள்ளது. பாலஸ்தீன அதிபர் மஹமூத் அப்பாஸ் டெல்லி வந்துள்ளார். நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது பாலஸ்தீனத்திற்கான 20 மில்லியன் டாலர் நிதியுதவியை இந்தியா அறிவித்தது. அதன்படி பாலஸ்தீனத்தின் உடனடி தேவைகளுக்காக 10 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், வளர்ச்சித் திட்டங்களுக்கு 10 மில்லியன் டாலர் நிதியுதவியை இந்தியா அறிவித்துள்ளது.
சென்னை: வியன்னாவில் நடைபெறவுள்ள இன்டர்போல் கூட்டத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கைது செய்து நாடு கடத்துமாறு கோரிக்கை வைக்க சிபிஐக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி அருகே இரண்டு தேவாலயங்கள் மீது கற்களை வீசி மர்ம நபர்கள் தாக்குதல் நடந்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வாஷிங்டன்: இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த சட்டத்தில் இன்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கையெழுத்திடவுள்ள நிலையில், ஒப்பந்தத்தில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் பத்தாம் தேதி கையெழுத்திடுகின்றனர். இதற்காக பிரணாப் முகர்ஜி வாஷிங்டன் செல்கிறார்.
டெல்லி: கடந்த வாரம் நாட்டின் பணவீக்கம் லேசாகக் குறைந்ததைத் தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கி தனது இறுக்கமான பணவியல் கொள்கையை லேசாகத் தளர்த்திக் கொண்டுள்ளது.
அகமதாபாத்: மேற்கு வங்கத்திற்கு டாடா காட்டி விட்ட டாடாவின் நானோ தொழிற்சாலை குஜராத் மாநிலம் சனந்த் கிராமத்தில் அமைகிறது. இதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று மாலை குஜராத் முதல்வர் மோடியும், டாடா குழும தலைவர் ரத்தன் டாடாவும் கையெழுத்திட்டனர்.
No comments:
Post a Comment