'அஸ்ஸாம் கலவரத்திற்கு 'போடோ'தான் காரணம்'
உதல்குரி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 6 அக்டோபர் 2008 ( 12:27 IST )
அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற கலவரம் மற்றும் அதனைத் தொடர்ந்து 32 பேர் கொல்லபட்ட சம்வம் போன்றவற்றிற்கு 'போடோ' தீவிரவாத இயக்கம்தான் காரணம் என்று அம்மாநில அரசு கூறியுள்ளது. உதல்குரி,டர்ரங் மற்றும் பக்சா ஆகிய 3 மாவட்டங்களில் கடந்த வாரம் இறுதியில் போடோ பழங்குடியினத்தவருக்கும்,வேறு இடங்களிலிருந்து அங்கு குடியேறிய இஸ்லாமியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் 32 பேர் கொல்லப்பட்டனர் ; 100 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.600 க்கும் அதிகமான வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.60,000 க்கும் அதிகமானோர் தங்களது வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு குடி புகுந்தனர்.
இந்நிலையில், இந்த கலவரத்திற்கு 'போடோ'தனி மாநிலம் கோரி போராடி வரும் போடோ தேசிய ஜனநாயக முன்னணிதான்( என்டிஎப்பி ) காரணம் என்று அஸ்ஸாம் அரசு குற்றம் சாற்றியுள்ளது.
அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான்,போடோ அல்லாதவர்களை மாநிலத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் நோக்கில் செயல்பட்டு, இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதுவே கலவரத்திற்கு காரணம் என்றும் அஸ்ஸாம் மாநில அரசின் செய்தி தொடர்பாளரும், சுகாதாரத் துறை அமைச்சருமான பிஸ்வா ஷர்மா தெரிவித்துள்ளார்.
என்டிஎப்பி அமைப்பைச் சேர்ந்த 4 பேர் ஆயுதங்களுடன் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு பக்சா மாவட்டத்தில் ஒரு பெண் மற்றும் குழந்தை கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment