Thursday, October 9, 2008

செய்தி துளிகள்

"ப‌ஜ்ர‌ங் தள‌த்தை‌த் தடை செ‌ய்தா‌‌ல் ம‌த்‌திய அரசு கடு‌ம் ‌விளைவுகளை‌‌ச் ச‌ந்‌தி‌க்க நே‌ரிடு‌ம் எ‌ன்று" ப‌ஜ்ர‌ங் த‌ள‌ம் அமை‌ப்‌பி‌ன் தே‌சிய அமை‌ப்பாள‌ர் ‌பிரகா‌ஷ் ச‌ர்மா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

புவனே‌ஸ்வ‌ர்: ஒ‌ரிசா‌வி‌ல் ‌கி‌றி‌த்தவ‌ர்களு‌க்கு எ‌திரான கலவர‌ங்க‌ளி‌ன் போது க‌ன்‌னியா‌ஸ்‌தி‌ரி க‌ற்ப‌ழி‌க்க‌ப்ப‌ட்டது தொட‌ர்பாக வ‌லுவான ஆதார‌ங்க‌ளி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் 5 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌க் காவல‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

புது டெல்லி: நமது நாடு முழுவது‌ம் உ‌ள்ள ம‌க்களு‌க்கு எ‌ல்லா‌த் தகவ‌ல்களு‌ம் செ‌ன்றடையு‌ம் வகை‌யி‌ல் க‌ம்‌ப்யூ‌ட்ட‌ர், வய‌ர்லெ‌ஸ் இணை‌ப்புட‌ன் கூடிய 18,000 பொது‌ச் சேவை மைய‌ங்க‌ளை ம‌த்‌திய அரசு அமை‌‌த்து‌‌ள்ளது.

மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதை அடுத்து, அங்கு கோயில் குடமுழுக்கு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விழு‌ப்பு‌ர‌ம் : விழு‌ப்பு‌ர‌ம் மாவ‌ட்ட‌ம் கா‌ட்பாடி‌யி‌ல் உ‌ள்ள ‌கி‌றி‌ஸ்தவ க‌ல்லறை தோ‌ட்ட‌த்‌தி‌ல் புகு‌ந்த ம‌ர்ம ந‌ப‌ர்க‌ள் அ‌ங்‌கிரு‌ந்த க‌ல்லறைகளை உடை‌த்து சேத‌‌ப்படு‌த்‌‌தின‌ர். இது தொட‌ர்பாக 2 பே‌ரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

செ‌ன்னை: தேவாலயங்கள் மீது தாக்குதல் நட‌த்‌தி‌ சமாதானத்தை சீர்குலைக்கும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடு‌த்து த‌மிழக அரசு இவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் எ‌ன்று ‌ தே.மு.தி.க. தலைவர் விஜயகா‌ந்‌‌த் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

சென்னை: சென்னை மாநகரில் குளு குளு வசதி செய்யப்பட்ட வோல்வோ சொகுசுப் பேருந்துகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தேனி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனடியாக அரசியலுக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் கூண்டோடு தற்கொலை செய்து கொள்வோம் என தேனி மாவட்ட ரஜினி ரசிகர்கள் மிரட்டியுள்ளனர்.

புதுடெல்லி, அக். 9: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை அனுமதிக்கும் சட்டத்தில் அதிபர் ஜார்ஜ் புஷ் இன்று அதிகாலை கையெழுத்திட்டார். இதனையடுத்து, நாளை மறுதினம் அமெரிக்காவில் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காண்டலீசா ரைஸ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்கள்.

டெல்லி: இந்தியாவில் உள்ள வங்கிகளிலும், இந்தியாவில் உள்ள வெளிநாட்டு வங்கிகளிலும் வாடிக்கையார்களின் முதலீடுகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது. எனவே எந்த வங்கியும் திவாலாகாது, அதுகுறித்து வாடிக்கையாளர்கள் சற்றும் பயப்படத் தேவையில்லை என்று மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.

டெல்லி: தேர்தல் காலங்களின்போது வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை ஒளிபரப்பவும், வெளியிடவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பான 1951ம் ஆண்டைய மக்கள் பிரதிநிதித்துவ சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் விரைவில் தாக்கல் செய்யப்படும்

மதுரை: மதுரையில் மு.க.அழகிரியின் ராயல் கேபிள் விஷன் நிறுவனத்தினர் கொடுத்த புகாரின் பேரில் சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தைச் ேசர்ந்த ஆபரேட்டர் மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கில்டு தலைவர் பாண்டி ஆகியோரை போலீஸார் திடீரென கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பெங்களூர்: இந்திய அணி வீரர்கள் இன்னும் பள்ளிக்கூடத்தில் விளையாடுவது போல கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கின்றனர் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங் நக்கலடித்துள்ளார்.

No comments: