செய்தி துளிகள்
கோத்ராவில் ரயில் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹுசைன் முகம்மது தோபி (65)சனிக்கிழமை இறந்தார்.நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்ததன் காரணமாக அவர் உயிரிழந்தார் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை: நாட்டின் பாரம்பரிய வரலாற்றை சிதைக்கும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்துவரும் கலவரங்கள், வன்முறைகள் கண்டனத்துக்குரியவை என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி தெரிவித்துள்ளார்.
காத்மாண்டு: நேபாள நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் படுகாயமடைந்தனர். கிழக்கில் உள்ள மொராங் மாட்டத்தின், ஹட்டிமோடா கிராமத்தில் உள்ள மசூதியில் நேற்று இரவு சில விஷமிகள் குண்டை எரிந்து விட்டுச் சென்றனர். அது பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியதில் மசூதியில் இருந்த 5 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்பது தெரியவில்லை.
கொழும்பு: கிளிநொச்சியை ராணுவம் சுற்றி வளைத்துள்ள நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் வடக்கிலிருந்து தப்பி ஓடும் வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்: விசாகப்பட்டனம் மாவட்டம் சோதாவரம் தொகுதியைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. காந்த சீனிவாச ராவ் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியில் அவர் இணையவுள்ளார்.
கோவை: பவானி ஆற்றின் குறுக்கே ஐந்து இடங்களில் தடுப்பணைகள் கட்ட கேரளா திடீர் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் கோவை, ஈரோடு மாவட்ட குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
தெற்கு கிர்கிஸ்தானின் அலைஸ்கி என்ற மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.இது, ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியிருந்தது என அமெரிக்க புவிவியல் ஆய்வு மையமை தெரிவித்துள்ளது.இந்நிலநடுக்கத்தில் 58 பேர் பலியாயினர்; 50 பேர் பலத்த காயமடைந்தனர் என்று அந்நாட்டின் அவசரகால நிலைகளுக்கான அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 120-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்ததாக, அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரிசா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சமீபகாலமாக மதக் கலவரம் தலைதூக்கியுள்ளது. குறிப்பாக, ஒரிசாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய மதக்கலவரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
இந்நிலையில், நாட்டில் தலைதூக்கியுள்ள மதக் கலவரங்களை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக, டெல்லியில் வரும் 13ம் தேதி தேசிய ஒருமைப்பாடு கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கின்றனர்.
No comments:
Post a Comment