Thursday, July 24, 2008

அணு சக்தி ஒப்பந்தமும் அரசியல் பேரமும்

கடந்த சில நாட்களாக இந்திய அரசியலில் மிகப்பெரிய சர்ச்சைகளும் விவாதங்களும் நடந்தும் அமெரிக்கா உடனான அணு சக்தி ஒப்பந்தத்தின் முதல் படியாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மன்மோகன் சிங் அரசு நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை இந்திய அரசியலில் நடந்திடாத அளவுக்கு கோடிக்கணக்கில் பேரம் நடந்து, எம்பி க்கள் விலைக்கு வாங்கப்பட்டு இந்த வெற்றியை அரசு பெற்றுள்ளது.

அந்த பேரத்தின் விளைவாக பி ஜேபி எம்பிக்கள் எட்டுப்பேரும், மதிமுக மற்றும் தெலுங்கு தேசத்தை சேர்ந்த தலா இரண்டு பெரும், பி ஜு ஜனதா தளம், மத சார்பற்ற ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், டி ஆர் எஸ், என் எல் பி ஆகிய காட்சிகளில் தலா ஒருவரும், மொத்தம் பதினைந்து பேர் அரசுக்கு ஆதரவாக தமது காட்சிகளில் முடிவை எதிர்த்து வாக்களித்து இருக்கிறார்கள். மேலும் ஒன்பது பேர் ஓட்டுப் போடவில்லை என்ற செய்தி உண்மையில் கோடிக்கணக்கில் பேரம் நடந்து இருப்பதை உண்மை என உறுதிப்படுத்தி இருக்கிறது.

அணு சக்தி ஒப்பந்தம்
அமெரிக்க உடனான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றுவதில் காங்கிரஸ், பிஜேபி வேறுபாடு இல்லாமல் அதரவு தெரிவித்து இருந்தது குறுப்பிடதக்கது.

அமெரிக்க மற்றும் அதன் கூட்டு நாடுகளிடம் இருந்து யுரேநியம் வாங்கி இந்தியாவில் எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்தி செய்ய இந்த ஒப்பந்தம் போட இருப்பதாகவும் அதனால் இந்தியாவின் பொருளாதாரம் சீன பொருளாதரத்திற்கு நிகராக வளரும் எனவும் அரசுத்தரப்பில் கூறி இருக்கிறார்கள்.

இதற்க்கு இடதுசாரிகள், மூன்றாவது அணியினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ஏனென்றால்,
  1. அமெரிக்க இந்தியாவுக்கு யுரேநியம் விற்பனை செய்ய வேண்டுமானால் இந்தியா அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். (ஒருவேளை ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தல் இந்தியா அமெரிக்காவிற்கு ஒத்துழைக்க வேண்டும், இந்தியாவில் இடம் கேட்டால் ராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியா இடமளிக்கக்கூட நேரிடும்)
  2. இந்தியா ஒப்பந்தத்தை சரியாக கடைபிடிக்கிறதா என பார்வையிட அமெரிக்காவின் ஒப்பந்த குழுவிற்கு அதிகாரம் உண்டு
  3. ஒருவேளை நம் வாங்கிய யுரேநியம் சக்தியை அணு ஆயுதத்திற்கு பயன் படுத்தியதாக அமெரிக்கா சந்தேகப்பட்டால் நம் அனுவுலைகளை ஆய்வு செய்ய அமெரிக்காவுக்கு அதிகாரம் உண்டு.
  4. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் அதிபர் அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் இந்தியா அணுசக்தி ஒப்பந்தத்தை முறையாக கடைபிடிக்கிறது என்று நற்சன்றிதல் அளிக்க வேண்டும்.
  5. எந்தநேரத்திலும் அமெரிக்கா இந்தியாவின் ஒப்பந்த விவகாரத்தில் சந்தேகப்பட்டல் ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்துகொள்ள அமெரிக்காவுக்கு அதிகாரம் உண்டு. (அதாவது நாம் அணுசக்தியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய அனைத்து ஏற்ப்படும் செய்து முடித்து பலகோடிகளை செலவு செய்தபின் இந்தியாவுக்கு அமெரிக்கா யுரேநியம் தராது என நிர்பந்தப்படுத்த முடியும். )
  6. அதேபோல் நம் எந்த ஒரு அணு ஆயுத சோதனையும் செய்ய இந்த ஒப்பந்தம் தடை விதிக்கிறது. மேலுள்ள விபரங்களின் மூலம் இந்தியா மீது அமெரிக்கா சந்தேகப்படும்படி எந்த நடவடிக்கையும் நம்மால் செய்ய முடியாது என்றால் எப்படி நம் நட்டு பாதுகாப்பிற்காக எந்த சோதனையும் செய்ய முடியாது.

இதுபோன்று எண்ணெற்ற சிக்கல்தாலும் இந்தியாவின் இறையாண்மைக்கும் பாதிக்கும் வகையிலான இந்த ஒப்பந்ததிர்க்குத்தான் மன்மோகன் சிங் அரசு இவ்வளவு வலிமையையும், கோடிக்கணக்கான பணத்தையும் செலவு பண்ணி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளது.

அமெரிக்காவின் தந்தரம் தெரிந்தும் நம் அரசியல்வாதிகள் அவர்களில் சொந்த இலாபத்திற்காக நாட்டை அடமானம் வைத்துவிடப்போவது தெளிவு...

அப்துல் ஹலீம் / புதுவலசை ஜமாஅத்

No comments: