சைவம் மட்டும் போதாது ஆய்வுமுடிவு
கொழுப்பு சத்து நிறைந்த இறைச்சி, மீன், சிக்கன், முட்டை போன்றவற்றை சாப்பிடக்கூடாது, இதனால் மாரடைப்பு போன்ற ஆபத்து ஏற்படும் என்று நீண்ட நாட்களாகவே டாக்டர்கள் அசைவ உணவு பிரியர்களுக்கு தடை போட்டு வந்தனர். சைவ உணவு சாப்பிடும் `வெஜிட்டேரியன்'களுக்கு எந்த நோயும் வராது என்று கூறினார்கள்.ஆனால் இப்போது டெல்லியில் உள்ள ஒரு ஆராய்ச்சி டாக்டர் அருள் கார்க் இதற்கு மாறான தகவலை தெரிவித்து இருக்கிறார். மீன், இறைச்சி, முட்டைகளை வெளுத்துக்கட்டும் அசைவ உணவுக்காரர்களுக்கு இது ஆறுதல் அளிக்கும் விஷயம். சைவ உணவு மட்டுமே சாப்பிடுகிறவர்களுக்கு `பி-12' வைட்டமின் குறைபாடு ஏற்படும். இந்த வைட்டமின் குறைபாடு காரணமாக இருதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அசைவ உணவில் இந்த `பி-12' வைட்டமின் அதிகமாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகாலம் 5 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தி இந்த முடிவை அவர் வெளியிட்டு இருக்கிறார். *-12 வைட்டமின் குறைபாடு காரணமாக `ஹோமோ சிஸ்டின்' என்ற வேதியியல் பொருளின் அளவை அதிகரித்து மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். ரத்தக் குழாய்களில் ரத்தம் உறையும் அபாயமும் ஏற்பட்டுவிடும்.மூளைக்கு ரத்தம் செல்வது பாதிக்கப்பட்டு அதனால் பக்கவாதம் ஏற்படும். பார்வை குறைபாடு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அசைவ உணவு இருதயத்தை பலப்படுத்தி இருதய நோய்களை தடுக்கும். இவ்வாறு அந்த டாக்டர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஆண்டுதோறும் 75 லட்சம் பேர் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியால் 6 லட்சம் பேர் ஆண்டுதோறும் பக்கவாத நோயால் பலியாகிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment