seithi thulikal
கந்தமால் மாவட்டம் ராய்சியா என்ற இடத்தில் பாதுகாப்புக்கு நின்று இருந்த 2 போலீசார் மீது கலவர கும்பல் திடீரென தாக்கியது.அதில் ஒரு போலீஸ்காரர் தப்பி ஓடி விட்டார்.ஒருவர் சிக்கி கொண்டார். அவரை கலவர கும்பல் அடித்து கொன்றது.
இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்கு (சிமி) மத்திய அரசு தடை விதித்ததை தில்லி உயர் நீதிமன்றம் நீக்கியுள்ள நிலையில்,இதுதொடர்பான வழக்கை அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
தீவிரவாதத்தை ஒழிப்பதில் மத்திய அரசு மெத்தனமாக செயல்படுவதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற அவர்,செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு கூறினார்.
என் பெயரில் கட்சி தொடங்குவது,கொடி அறிமுகப்படுத்துவது, என் படத்தை பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடும் ரசிகர்களை மன்றத்தில் இருந்து நீக்குவேன்.அதன்பின்னும்,அதை தொடர்ந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் எச்சரித்துள்ளார்.
ஒரிசா மற்றும் கர்நாடகத்தில் கிறிஸ்தவர் மீதான தாக்குதல் நமது அடிப்படை கலாசாரத்துக்கே ஆபத்தானது. மத சகிப்புத்தன்மை வேற்றுமையில் ஒற்றுமை என்ற நமது பண்பாட்டின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
இந்தியாவில் 30லட்சம் பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தேசிய மனித உரிமைக் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.கமிஷனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
எந்த மதத்துக்கு எதிரான வன்முறையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்தார்.ஒரிசாவில் பஜ்ரங் தள அமைப்பினர் கிறிஸ்தவர்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அத்வானி இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
ஒரிசாவில் மகன்,தங்கை,அவருடைய மகளை நரபலி கொடுத்து நள்ளிரவில் பூஜை நடத்திய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார்.இரும்பு தடியால் தாக்கப்பட்ட ஊழியரின் மகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார்.
No comments:
Post a Comment