Thursday, October 2, 2008


மாணவர்களில் சிலர் சமூக வீரோதிகளாக மாற காரணம்?
வாஷிங்டன் (ஏஜென்சி), புதன்கிழமை, 1 அக்டோபர் 2008 ( 16:10 IST )


வளரிளம் பருவ இளைஞர்களில் சிலர், சமூக விரோதிகளாக மாறுவதற்கு, ஒருவித மனநல கோளாறே காரணம் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்கு அடங்காத இளம் வயது ஆண்களுக்கும், கோர்டிசோல் என்படும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் குறைவாக இருப்பதற்கும் உள்ள தொடர்பை, மருத்துவ ஆய்வுக்குழு ஒன்று ஆராய்ச்சி செய்தது.

பொதுவாக மேடையில் பேசும்போது, தேர்வு அறையில் அமர்ந்திருக்கும் போது அல்லது அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்போது ஒருவருக்கு கவலை ஏற்படும்.அந்த சமயங்களில்தான் இந்த கோர்டிசோல் அதிகமாவது வழக்கம்.இந்த வகை ஹார்மோனானது, நினைவாற்றல் தகவல்களை அதிகப்படுத்தி, நாம் உணர்ச்சிவசப்படும் போதும், கோபமடைந்து வன்முறையில் இறங்க முற்படும்போதும், நம்மை மிக கவனத்துடன் இருக்கச் செய்வதோடு, நம்மை கட்டுப்படுத்தவும் செய்யும்.

இந்த ஆய்வில், சமூகத்தில் அடங்காத ஆண்களுக்கு, மன அழுத்தம் நிறைந்தச் சூழலில் ஆட்படும்போது, போதுமான கோர்டிசோல் உற்பத்தியாவதில்லை என்பது தெரிய வந்துள்ளது.

சில மாணவர்களின் மூளையிலும், உடலிலும் இரசாயன சமநிலையின்மை இருப்பதன் காரணமாக, அவர்கள் மோசமானவர்களாக மாறுகின்றனர் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறினர். இது, மனநல கோளாறின் ஒரு வடிவமே என்று அவர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வு, டாக்டர் கிராம் ஃபேர்சைல்ட் மற்றும் பேராசிரியர் இயன் கூட்யர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த மனநல பாதிப்புக்கு உள்ளாகும் மாணவர்களைக் கண்டறிந்து, உரிய முறையில் சிகிச்சை அளித்தால், அவர்கள் சமூகத்தில் நல்ல நிலைக்கு திரும்ப வழிவகை செய்ய முடியும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments: