மீண்டும் மதமாற்ற தடை சட்டம்: ராமகோபாலன்
திங்கள்கிழமை, செப்டம்பர் 22, 2008
ராமேஸ்வரம்: ஏழைகளை ஆசைகாட்டி மத மாற்றம் செய்கின்றனர். இதனால் மதமாற்ற தடை சட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வர வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த டிசம்பர் 28ல் சென்னையில் ராமாயண பெருவிழா நடத்தப்படும் என்று இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் கூறியுள்ளார்.
ராமேஸ்வரம் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது. டெல்லியில் தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தீவிரவாதிகளை கண்காணித்து அவர்களின் சதியை முன் கூட்டியே முறியடிக்க வேண்டும்.மேலும் தீவிரவாதிகளை கண்காணிப்பதற்கென்றே சிறப்பு புலனாய்வுத் துறையை ஏற்படுத்த வேண்டும். குண்டு வெடிக்கும்போது அதிலிருந்து தப்பிப்பது, வெடித்தால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து தரப்பினருக்கும் அரசு கற்றுத்தர வேண்டும்.பயங்கரவாதத்தை முறியடிப்பதில் முன்னோடியாக விளங்கும் இஸ்ரேலிடம் அதற்கான தொழில்நுட்பம், உளவுத்திறன் குறித்து இந்தியா ஆலோசனை பெறவேண்டும்.
பாகிஸ்தானில் இருந்து தமிழகத்துக்கு கேரளா வழியாக கள்ளநோட்டுகள் வருகின்றன. இதுகுறித்து அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதமாற்றத்துக்கு உரிமை இருப்பதாக கிறிஸ்தவர்கள் கூறிகின்றனர். எனில் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாமே. ஏழைகளை ஆசைகாட்டி மதமாற்றம் செய்து வருகின்றனர். மதமாற்ற தடை சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்.இவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டிசம்பர் 28ம் தேதி சென்னை தாம்பரத்தில் பெரிய அளவிலான ராமாயண பெருவிழா நடத்த திட்டமிட்டுள்ளோம். நாடு முழுவதிலும் இருந்து பல துறவிகள் இதில் கலந்துக கொள்கின்றனர்.
ராமர் பாலம் தொடர்பாக அரிச்சமுனை பகுதியை உடைத்து கால்வாய் அமைக்கலாமா என்று ஆலோசித்து வருகின்றனர். இடிப்பதில் கவனம் செலுத்திகிறார்களே தவிர மாற்றுபாதை அமைப்பது தீவிரம் காட்டுவதாக தெரியவில்லை.
விநாயகர் சதுர்த்தி விழா இந்தாண்டு வெள்ளி விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு, திண்டுக்கல் பேகம்பூர், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதிகளில் மட்டும் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தி ஊர்வலம் செல்ல கூடாது என்று மறித்தனர். பக்தர்கள் கட்டுப்பாடாக இருந்து அசம்பாவிதங்களை தவிர்த்தனர் என்றார்.
No comments:
Post a Comment