பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் முக்கிய அம்சம்
- அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் 8 தங்கப் பதக்கம் வென்று உலக சாதனை படைத்தது.
- பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்கு மிகவும் விசேஷமாக அமைந்தது. இதுவரை இல்லாத அளவு ஒரு தங்கம், இரு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றது இந்தியா.
- இந்தியா சார்பில் 56 பேர் பங்கேற்றனர். இதில் அபினவ் பிந்த்ரா தங்கமும், சுஷில்குமார், விஜேந்தர் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் வென்று பெருமை சேர்த்தனர்.
- 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டங்களில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் உலக சாதனையுடன் தங்கம் வென்றார். ஆடவர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் போல்ட்டுக்கு தங்கம் கிடைத்தது.
- மாரத்தான் போட்டியில், தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றை ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களே வென்று சாதனை படைத்தனர்.
- கால்பந்தில் அர்ஜென்டினா தங்கம் வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.
- ஜிம்னாஸ்டிக்ஸில் சீனாவின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. மொத்தம் உள்ள 18 தங்கப் பதக்கங்களில் சீனா 11ஐ அள்ளியது.
- நிறைவு விழாவில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கொண்ட குழுக்கள் கலந்து கொண்டன.
No comments:
Post a Comment