ராமநாதபுரம்: அதிமுக பிரமுகர் காரில் வெடிபொருள்கள் ஆகஸ்ட் 18, 2008
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வெடி பொருட்களுடன் சென்ற அதிமுக பிரமுகரின் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் செக்போஸ்ட்டில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஸ்கார்பியோ கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து போலீஸார் காரை விரட்டிச் சென்று பிடித்தனர். அப்போது காரில் இருந்தவர்கள் தப்பியோடினர்.காரை சோதனை செய்தபோது அதில் 20 ஜெலட்டின் குச்சிகள், இரண்டு டெட்டனேட்டர், அரிவாள்கள், உருட்டைக்கட்டைகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தன. போலீஸார் அவற்றை பறிமுதல் செய்தனர்.விசாரணையில் காரிக்கூட்டத்தை சேர்ந்த அதிமுக ஒன்றிய இலக்கிய அணித் தலைவர் நூர் முகமதுவின் மகன் கஜினி முகமது தனதுச சகாக்களுடன் அந்த காரில் சென்றது தெரியவந்தது. மேலும், நிலம் தொடர்பான பிரச்சனையில் தனது உறவினர் கலில் ரகுமான் மகன் சுல்தானை கொலை செய்ய ஆயுதங்களுடன் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து தலைமறைவான கஜினி முகமது அப்துல் சலாம், தமிழ்செல்வன், தமிழரசன், கார்த்திக், இளையராஜா ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Puduvalasai Jamath website is a community portal to communicate worldwide people to share local activities and events.
Tuesday, August 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment