இந்தியர்கள் இனிமேல் பஹ்ரெய்ன் சென்று அங்கு விசா பெற்றுக்கொள்ளலாம்
துபாய் : இந்தியர்கள் இனிமேல் பஹ்ரெய்ன் செல்ல வேண்டும் என்றால் இங்கிருந்தே விசா பெற்றுக்கொண்டு செல்ல வேண்டியதில்லை. அங்கே போனபின் அங்கேயே பெற்றுக்கொள்ளலாம். இந்தியாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பஹ்ரெய்ன் அரசு இந்த திட்டத்தை ( விசா ஆன் அரைவல் ) விரைவில் அமல் படுத்த இருக்கிறது. ஆரம்பத்தில் இரு வாரங்களுக்கு மட்டும் விசா வழங்கப்படும் என்று பஹ்ரெய்ன் அரசு தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே பஹ்ரெய்ன் அரசு 35 நாடுகளை விசா ஆன் அரைவல் லிஸ்ட்டில் வைத்திருக்கிறது. இப்போது அந்த லிஸ்ட்டில் இந்தியாவையும் ரஷ்யாவையும் சேர்த்திருக்கிறது. பஹ்ரெய்ன் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து கிங் ஃபாட் காஸ்வே கடல் பாலம் வழியாக பஹ்ரெய்ன் வருபவர்களும் அங்கு சென்ற பின் விசா பெற்றுக்கொள்ளலாம். இந்தியா மற்றும் ரஷ்யாவில் இருந்து பிசினஸ் மற்றும் பேமிலி டூர் நிறைய பேர் வருவதால் இந்த வசதி செய்து கொடுப்பதாக பஹ்ரெய்ன் அரசு தெரிவித்திருக்கிறது.
3 comments:
Assalamualaikum
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
In the name of Allah, the Beneficent, the Merciful.
wa alaikkum salam bro
Post a Comment