செய்தி துளிகள்
உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய இட ஒதுக்கீட்டை பெற அவர்களது ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.4 1/2 லட்சமாக உயர்த்தியதற்காக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முதலமைச்சர் கருணாநிதி நன்றி கடிதம் அனுப்பியுள்ளார்.
சென்னை: இட ஒதுக்கீடு சலுகை என்பது சமூக ரீதியில் வழங்கப்பட வேண்டுமே தவிர, பொருளாதார ரீதியில் வழங்கப்படக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் முழுமையாக இதர பிற்படுத்தப்பட்டோருக்கே கிடைத்திட வருமான உச்சவரம்பை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் தா. பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ''உயர்கல்வி நிறுவனங்களில் பின்தங்கிய மக்களுக்கான இட ஒதுக்கீடு கொள்கை முழுமையாக நிறைவேற வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது'' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெனரேட்டர்கள் மூலம் மின்சக்தியை உற்பத்தி செய்து கொள்ளும் வசதி படைத்த பெரிய தொழில் நிறுவனங்களுக்கு மானியம் அளிக்க கூடாது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
வேலூர்: தேர்தலில் தி.மு.க. தோற்றால் மின்வெட்டு முக்கிய காரணமாக அமைந்து விடுமோ என்று அஞ்சுவதாக மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
மதுரை: தமிழகத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர அதிக வாய்ப்பு உள்ளது என்று அக்கட்சியின் தேசிய செயலர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை: பொது இடங்களில் புகைபிடிக்க தடை சட்டத்தால், பாதிக்கப்ப்டடுள்ள பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராமேஸ்வரம்: உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் மாற்றுப் பாதையில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து பொறியியல் வல்லுநர் குழு ஒன்று ஆய்வு நடத்தி வருகிறது.
புது டெல்லி: ஹைட் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு இந்தியாவிற்குள்ள அணு ஆயுதச் சோதனை நடத்தும் வாய்ப்புகள் மூடப்பட்டு விட்டதாலேயே அணு சக்தி ஒப்பந்தத்தைத் தாங்கள் அதிர்ப்பதாகவும் அமெரிக்க அயலுறவு அமைச்சர் கோண்டலீசா ரைசிடம் எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி கூறியுள்ளார்.
புது டெல்லி: இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று அமெரிக்க அயலுறவு அமைச்சர் கோண்டலீசா ரைஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொழும்பு: பயிற்சிப் பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகளை இணைந்து நடத்துதல், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் பறிமாற்றம் ஆகியவற்றை ஊக்குவித்தல் ஆகியவை தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் இந்தியாவும் சிறிலங்காவும் கையெழுத்திட்டுள்ளன.
புல்பானி: ஒரிசாவில் மதக் கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கந்தமால் மாவட்டத்தில் மர்ம நபர்களால் 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதனால் அப்பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
குவஹாத்தி : வடக்கு அஸ்ஸாமில் வங்க தேசத்தில் இருந்து குடியேறியுள்ள முஸ்ஸீம்களுக்கும், போடோ பழங்குடியினருக்கும் இடையே நடந்துவரும் மதக் கலவரத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
உதால்குரி: அஸ்ஸாம் மிநிலம் உதால்குரி மாவட்டத்தில் போடோக்களுக்கும் சட்ட விரோதமாக பங்களாதேஷிலிருந்து குடிவந்தவர்களுக்கும் ஏற்பட்ட மோதலைத் தடுக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில், துபாய், ஷார்ஜா, அஜ்மான், ரஸ் அல் கய்மாவில் இந்தியாவை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளனர், அங்கு வீட்டு வாடகை கட்டுபடியாகாததால், காரிலேயே தூங்கி எழுகின்றனர்.
No comments:
Post a Comment