செய்தி துளிகள்
நெல்லை: பாளை வஉசி மைதானத்தில் வரும் 4ம் தேதி திராவிடர் கழக மாணவரணி சார்பில் மூடநம்பிக்கை எதிர்ப்பு மாநாடு மற்றும் பேரணி நடக்கிறது. பேரணியை அமைச்சர் டிபிஎம் மைதீன்கான் தொடங்கி வைக்கிறார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் மாநகர் முழுவதும் தட்டி போர்டு வைக்கப்பட்டுள்ளது. அதில் தசரா நேரத்தில் மதகலவரத்தை ஏற்படுத்தும் வகையில் தி.க.வினர் நடத்தும் பேரணியை அமைச்சர் தொடங்கி வைக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.இந்நிலையில் நேற்று இரவோடு இரவாக இந்த பேனர்கள் அனைத்தையும் போலீசார் அகற்றி விட்டனர். இதற்கு பாஜவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெர்ஹாம்பூர்: ஒரிஸ்ஸாவில் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு மாணவி ஆசிரியர்களாலே கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை: உத்தபுரத்தில் இன்று மீண்டும் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் மோதலில் ஈடுபட்ட மக்களை கலைத்தனர். இதனால் அங்கு மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது
புல்பானி: ஒரிசாவில் கலவரத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள கந்தாமல் மாவட்டத்தில் மீண்டும் நடந்த மோதலில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை செய்திகள் தெரிவிக்கின்றன. பதற்றமான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டது.
தானே: மஹாராஷ்டிரா மாநிலம் தானேயில் உள்ள ரபோடி என்ற பகுதியில் நவராத்திரி திருவிழவை முன்னிட்டு 'பந்தல்' அமைப்பது தொடர்பாக இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அகர்தலா: திரிபுரா தலைநகர் அகர்தலாவில் ஐந்து இடங்களில் இன்று மாலை நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 4 பேர் உடல் சிதறி பலியானார்கள். 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜாம்ஷெட்பூர்: பிகார் மக்களை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டது தொடர்பான வழக்கில் மராட்டிய நவநிர்மாண் சேனைத் தலைவர் ராஜ் தாக்கரேவிற்கு எதிராகப் பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள சாமுண்ட மாதா கோயிலில் நவராத்திரி விழா துவக்க நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 150 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment