Thursday, September 4, 2008

ஒ‌ரிசா‌வி‌ல் ‌வி.எ‌ச்.‌பி. ஊ‌ர்வல‌ம்: ‌விள‌க்கம‌ளி‌க்க உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு!
புதன், 3 செப்டம்பர் 2008( 17:38 IST )

ஒ‌ரிசா‌வி‌ல் மத‌க் கலவர‌ங்க‌‌ளினா‌ல் பத‌ற்ற‌ம் ‌நீடி‌‌க்கு‌ம் ‌நிலை‌யி‌ல், சு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ல‌க்‌ஷ்மான‌ந்தா சர‌ஸ்வ‌தி உ‌ள்‌ளி‌ட்ட 5 பே‌ரி‌ன் அ‌ஸ்‌தியுட‌ன் ஊ‌ர்வல‌ம் நட‌த்‌துவத‌ற்கு ‌வி‌ஷ்வ இ‌ந்து ப‌ரிஷத் (‌விஎ‌‌ச்‌பி) அமை‌ப்‌பி‌ன் தலைவ‌ர் ‌பிர‌வீ‌ன் தொகாடியா‌வி‌ற்கு அனும‌திய‌‌ளி‌க்க‌ப்ப‌ட்டது ஏ‌ன் எ‌ன்று ‌விள‌க்கம‌ளி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று அ‌ம்மா‌நில அர‌சி‌ற்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.ஒ‌ரிசா‌வி‌ல் க‌ந்தமா‌ல் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் ‌விஎ‌ச்‌பி அமை‌ப்பை‌ச் சே‌ர்‌ந்த ல‌க்‌ஷ்மான‌ந்தா சர‌ஸ்வ‌தி உ‌ள்‌ளி‌ட்ட 5 பே‌ர் ம‌ர்ம நப‌ர்களா‌ல் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதை‌த் தொட‌ர்‌ந்து, ‌கி‌றி‌ஸ்தவ‌ர்களு‌க்கு எ‌திராக வெடி‌த்த கலவர‌த்‌தி‌ல், 16 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 650 ‌வீடுகளு‌ம், 17‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட தேவாலய‌ங்களு‌ம் எ‌ரி‌க்க‌ப்ப‌ட்டன. ‌கி‌றி‌ஸ்தவ‌ர்களு‌க்கு எ‌திராக நட‌‌க்கு‌ம் கலவர‌ங்களை உடனடியாக‌த் தடு‌க்க அர‌சி‌ற்கு உ‌த்தர‌‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம், கலவர‌ங்க‌ள் கு‌றி‌த்து ம‌த்‌திய‌ப் புலனா‌ய்வு‌க் கழக‌ம் ‌விசாரணை நட‌த்த உ‌த்தர‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் கோ‌ரி க‌ட்டா‌க் மாவ‌ட்ட‌த் தலைமை ஆய‌ர் சா‌ர்‌பி‌ல் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டது. மேலு‌ம், ஒ‌ரிசா‌வி‌ல் தொட‌ர்‌ந்து நட‌க்கு‌ம் கலவர‌ங்க‌ளினா‌‌ல் பத‌ற்ற‌ம் ‌நீடி‌க்கு‌ம் ‌நிலை‌யி‌ல், சு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌விஎ‌ச்‌பி தலைவ‌ர் ல‌க்‌ஷ்மான‌‌‌ந்தா சர‌ஸ்வ‌தி உ‌ள்‌ளி‌ட்ட 5 பே‌ரி‌ன் அ‌ஸ்‌தியுட‌ன் ஊ‌ர்வல‌ம் நட‌த்த அ‌வ்வமை‌ப்‌பி‌ன் தலைவ‌ர் ‌பிர‌வீ‌ன் தொகாடியா‌வி‌ற்கு அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள அனும‌தியை ர‌த்து செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் அ‌ந்த மனு‌வி‌ல் கோர‌ப்ப‌ட்டிரு‌ந்தது. இ‌ந்த வழ‌‌க்கை இ‌ன்று ‌விசா‌ரி‌த்த தலைமை ‌நீ‌திப‌தி கே.‌ஜி.பால‌கிரு‌ஷ்ண‌ன் தலைமை‌யிலான முத‌ன்மை அம‌ர்வு, பத‌ற்ற‌த்தை அ‌திக‌ரி‌க்கு‌ம் வகை‌யி‌ல் ‌பிர‌வீ‌ன் தொகாடியா‌வி‌ற்கு ஊ‌ர்வல‌ம் நட‌த்த அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டது ஏ‌ன் எ‌ன்று ‌விள‌க்கம‌ளி‌க்குமாறு ஒ‌ரிசா அர‌சி‌ற்கு உ‌த்தர‌வி‌ட்டது. மேலு‌ம், கலவர‌த்‌தை‌க் க‌ட்டு‌ப்படு‌த்தவு‌ம் ‌கி‌றி‌ஸ்தவ‌ர்களை‌ப் பாதுகா‌க்கவு‌ம் எ‌ன்னெ‌ன்ன நடவடி‌க்கைக‌ள் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளன எ‌ன்பது கு‌றி‌த்து நாளை‌க்கு‌ள் அ‌றி‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்யுமாறு ஒ‌ரிசா அர‌சி‌ற்கு‌த் தா‌க்‌கீது அனு‌ப்‌பவு‌ம் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டது.மு‌ன்னதாக, வா‌தி‌ட்ட அரசு வழ‌க்க‌றிஞ‌ர், தொகாடியா‌வி‌ற்கு அனும‌தி வழ‌ங்க‌ப்ப‌ட்டது கு‌றி‌த்து‌த் தன‌க்கு எதுவு‌ம் தெ‌ரியாது எ‌ன்று‌ம், அர‌சிட‌ம் ‌விள‌க்க‌ம் பெ‌ற்று‌த் தருவதாகவு‌ம் கூ‌றியு‌‌ள்ளா‌ர்.

No comments: