செய்தி துளிகள் 27-09-2008
காந்திநகர்: சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்பு சம்பவம் திட்டமிட்ட சதி. அது விபத்து அல்ல. அதைத் தொடர்ந்து கோத்ராவில் நடந்த வன்முறையில் முதல்வர் நரேந்திர மோடிக்கோ அவரது அமைச்சர்களுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்று பாஜக அரசு அமைத்த நானாவதி கமிஷன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புது டெல்லி: கோத்ரா கலவரங்கள் தொடர்பாக நனாவதி ஆணையம் நடத்திய விசாரணையில் உண்மையில்லை என்பதால், அந்த ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கை விவரங்கள் குறித்து ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
இந்நிலையில், நானாவதி கமிஷன் அறிக்கையை வெளியிட தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.ஏற்கனவே இதே கோத்ரா ரயில் எரிப்பு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி பானர்ஜி கமிட்டியின் அறிக்கையை வெளியிட உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்ததை சுட்டிக்காட்டி,நானாவதி கமிஷனுக்கும் அதே நிலையை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி கே.ஜி. பாலகிருஷணன் தலைமையிலான பெஞ்ச், நானாவதி கமிஷன் அறிக்கையை வெளியிட தடை விதிக்க மறுத்துவிட்டது.
No comments:
Post a Comment