ஜெருசலேம், செப். 23: இஸ்ரேலின் புதிய பிரதமராக வெளியுறவு அமைச்சர் ஜிப்பி லிவ்னி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இஸ்ரேலின் பிரதமராக பதவியேற்கும் முதல் பெண்மணி ஆவார்.
கொல்கத்தா: மமதா பானர்ஜியின் நிலையில் சற்றும் மாற்றம் இல்லாததாலும், தொடர்ந்து பணி செய்வதற்கு உகந்த சூழ்நிலை இல்லாததாலும் தனது நானோ கார் தொழிற்சாலையை காலி செய்யும் பணியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடங்கி விட்டது. முக்கிய உபகரணங்களை அங்கிருந்து எடுத்துச் செல்லும் வேலையை டாடா நிறுவனம் தொடங்கியுள்ளது.
சென்னை: கர்நாடகத்தில் நடைபெறும் சர்ச் தாக்குதல் சம்பவங்கள் திட்டமிட்டடவை. ஆனால் இந்து இயக்கங்கள் மீது பழிபோடப்பட்டுள்ளது என்று பாஜக மாநில தலைவர் இல.கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: தேவாலயங்களை தாக்குபவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்கப்போவதாக அறிவித்த அரசு, கோவில்களை தாக்குபவர்களையும் குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளார்.
கர்நாடக முதல்வர் எதியூரப்பா, கர்நாடகா-பெங்களூர் ஆர்ச் பிஷப்பை அவரது வீட்டில் சென்று சந்தித்திருக்கிறார். ஆனால், ஆர்ச் பிஷப், எதியூரப்பாவை வரவேற்காமல் தன்னுடைய வீட்டு வாசலிலேயே நிற்க வைத்து நாங்கள் புண்படுத்தப்பட்டதாக ஆவேசமாகத பேட்டியளித்திருக்கிறார்.
சென்னை, செப். 24: "வீட்டு மின் கட்டணத்தை அஞ்சலகங்களில் செலுத்துவதற்கான வசதி விரைவில் அறிமுகப் படுத்தப்படும்', என அஞ்சல் துறை தலைவர் மூர்த்தி தெரிவித்தார்.
வாஷிங்டன்: பெரும் நெருக்கடியான சூழலில், இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்ததுக்கு அமெரிக்க செனட்டின் வெளியுறவு விவகார கமிட்டி இன்று ஒப்புதல் தந்துவிட்டது.
சென்னை : தீவிரவாதத்தை தீவிர நடவடிக்கையால் மட்டும் ஒழித்து விட முடியாது. தீவிரவாதம் உருவாகக் காரணமான மனித நேயமற்ற, மத வெறி எண்ணங்கள் மாய்க்கப்பட்டால் தான் அதை ஒடுக்க முடியும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஹைதராபாத்: செகந்திராபாத்திலிருந்து திருப்பதிக்கு சென்று கொண்டிருந்த பத்மாவதி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டிகளில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட புகையில் 3 பயணிகள் மயங்கி சரிந்தனர்.
சண்டிகர்: தேர்தல் அரசியலிலிருந்து ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
டெல்லி: நாடுமுழுவதும் உள்ள சட்டசபைகளுக்கும், லோக்சபாவுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் வளர்ச்சிப் பணிகளில் தடங்கல் ஏற்படாது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் யோசனை தெரிவித்துள்ளார்.
டெல்லி: சுப்ரமணியம் சுவாமி தலைமையிலான ஜனதாக் கட்சியின் ஏர் உழவன் சின்னத்தை தேர்தல் ஆணையம் பறித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சுப்ரமணியம் சுவாமி தாக்கல் செய்த அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
டெல்லி: வரும் லோக்சபா தேர்தலில் மூத்த தலைவர்களுக்குப் பதில் அதிக அளவில் இளையவர்களுக்கு சீட் தர பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
துமாகா: நாட்டில் இதுவரை ஆட்சியில் இருந்த அரசுகளில் மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் அரசே மிகவும் திறனற்ற அரசு என பா.ஜ.க. மூத்த தலைவரும், பிரதமர் வேட்பாளருமான எல்.கே.அத்வானி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுடெல்லி: நாட்டில் தற்போதுள்ள சட்டங்களைக் கொண்டே தீவிரவாதத்திற்கு எதிராக ஸ்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், இந்த சட்டங்களே போதுமானது என்றார்.
பரஸ்பர நல்லெண்ண நம்பிக்கையூட்டும் நடவடிக்கையாக, வரும் அக்டோபர் மாதம் முதல் எல்லைப் பகுதி வர்த்தகத்தை ஏற்படுத்திக் கொள்ள இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டுள்ளன.
சென்னை மக்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் முதல் கடல் நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை : ''காங்கிரஸ், பா.ஜ. கட்சியுடன் கூட்டணி வைக்காத கட்சியுடன் இணைந்து 3வது அணியை உருவாக்கியே தீருவோம்'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் என். வரதராஜன் உறுதிப்பட கூறியுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மட்டும் காணப்படும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மதுரை: தமிழக உளவுத்துறை மேலும் பலப்படுத்தப்படும் என்று தமிழக டிஜிபி ஜெயின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தென் மாவட்டங்களில் காவல் பணிகளை குறித்து ஐஜி, டிஐஜி, மற்றும் எஸ்பிக்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி இடைத் தேர்தலின்போது மாநகராட்சி பகுதியில் நடந்த மோதல்கள் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment