Saturday, September 20, 2008

'இந்தியாவுக்கு அணு எரிபொருள்:ரஷ்யா தடையின்றி வழங்கும்'
புதுடெல்லி(ஏஜென்சி), புதன்கிழமை, 17 செப்டம்பர் 2008 ( 17:55 IST )

நம்மோடு செய்துகொள்ளும் அணு சக்தி ஒத்துழைப்பை அமெரிக்கா முறித்துக்கொண்டாலும், மற்ற வல்லரசுகளான ரஷ்யாவும், பிரான்ஸூம் இந்தியாவிற்கு தொடர்ந்து அணு எரிபொருள் வழங்கும் என்று அணு விஞ்ஞானி எம்.ஆர். சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியா அணு ஆயுத சோதனை மேற்கொள்ளும் நிலையில் அமெரிக்க யுரேனியம் எரிபொருள் வழங்குவதை நிறுத்தினாலும், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகளும் நமது அணு சக்தி உலைகளுக்குத் தேவையான யுரேனியம் எரிபொருளை தடையின்றி தொடர்ந்து வழங்கும்.நாம் அணு ஆயுத சோதனை நடத்தும் பட்சத்தில் நமக்கு அளித்துவரும் எரிபொருளை நிறுத்துவது மட்டுமின்றி, நமக்கு விற்ற அணு சக்தி உபகரணங்களையும் அமெரிக்கா திரும்பப் பெற இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.

ஆனால், அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவில் (என்.எஸ்.ஜி.) உள்ள மற்ற நாடுகளை இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம் எந்த வித்த்திலும் கட்டுப்படுத்தாது.இவ்வமைப்பில் உள்ள நாடுகளுக்கு இதுபோன்ற எந்தவிதமான பொது விதியும் கிடையாது.எனவே, இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தினாலும், நமது நாட்டின் அணு சக்தி உலைகளுக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யாவும், பிரான்ஸூம் தொடர்ந்து வழங்கும் என்று கூறியுள்ளார் சீனிவாசன்.

No comments: